ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.
கடைசியாக நடைபெற்ற பிக்பாஸ் ஐந்தாவது சீசனில், ராஜு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தற்போது பிக்பாஸ் ஆறாவது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.
அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
பிக் பாஸ் வீட்டில் ஹவுஸ்மேட்ஸ் இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒரு மைக் முன்பாக நின்று கத்த வேண்டும். என்ன சத்தம் இந்த நேரம் என்கிற இந்த போட்டியில், அதிக டெசிபல் வரும்படி யார் அதிகம் சத்தம் எழுப்பி கட்டுகிறார்களோ அவர்களுக்கு ஸ்டார் வழங்கப்படும். இதனை தொடர்ந்து அசீம் கத்துகிறார், ஆனால் அவருடைய குரல் சரியாக பதிவாகவில்லை என்கிற காரணத்துக்காக மீண்டும் அவரை பிக்பாஸ் கத்த சொல்லுகிறார். இதேபோல் மற்ற அணி கத்துபொழுது அவர்கள் இரண்டாவது முறை கத்துவதற்கு வாய்ப்பு கேட்கின்றனர்.
இதை பார்த்த அசீம் அணியை சேர்ந்த ஜிபி முத்து கொந்தளித்து விட்டார். ஜிபி முத்துவின் அணியில் இருந்தவர்களும், “இது பிக் பாஸாக எடுத்த முடிவுதான்.. நீங்கள் அதை வாய்ப்பாக பயன்படுத்தி இன்னொரு முறை கத்துவதற்கு கேட்கிறீர்கள். டெக்னிக்கல் பிரச்சனை வேறு.. நீங்கள் கேட்பது வேறு” என்று சண்டையிடுகின்றனர். அப்போது கொந்தளித்த ஜி பி முத்து, ‘இந்த ஆட்டமே தப்பு.. இப்படி இருந்தால் வேண்டவே வேண்டாம்’ என்று வாதிடுகிறார்.
இதனை தொடர்ந்து அனைவரும் கத்த, இவர்களுள் ஆண்களுள் ஜிபி முத்து 1.5 டெசிபள் வரும் அளவுக்கும், பெண்களுள் ரச்சிதா, 2.3 டெசிபள் வரும் அளவுக்கும் சத்தமாக கத்தியுள்ளனர். குறிப்பாக ரச்சிதா கத்தியதுதான் மொத்தமாக அதிக டெசிபள். கத்தும் முன்பு ரச்சிதா, தன் டெசிபளை உணர்ந்தவாறு அமைதியாக வந்து நின்று, சில நொடிகள் மௌனமாக இருந்து தன்னை தயார் படுத்திக்கொண்டு அதிவேகமாக கத்தினார். பின்னர் அனைவரும் அவருக்கு கைகொடுத்து பாராட்டினர். சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பயணத்தை தொடங்கிய ரச்சிதா, சில திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கினார். தற்போது அடுத்த கட்டத்தை நோக்கி பிக்பாஸ்க்குள் வந்திருக்கிறார்.