பிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராவிடம் நின்று தன்னிடம் பேசுமாறு கிண்டலாக கோரிக்கை வைக்கிறார் மைனா.
கடந்த வாரம் துவங்கிய பிக் பாஸ் ஆறாம் சீசன் களைகட்ட துவங்கியிருக்கிறது. பிக்பாஸ் அல்டிமேட் போலவே, இந்த சீசனும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. போட்டியாளர்களுக்கிடையே நடைபெறும் கலகல பேச்சுவார்த்தைகள், விவாதங்கள் என பிக்பாஸ் வீடு சுவாரஸ்யம் நிரம்பியதாக மாறியுள்ளது.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, மைனா நந்தினி உள்ளிட்ட 21 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
துவக்கத்தில் 20 பேர் இருந்த வீட்டில் தற்போது புதிதாக நுழைந்திருக்கிறார் மைனா. பிரபல சின்னத்திரை நடிகரான மைனா, பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த உடனேயே அனைவரிடமும் ஜாலியாக உரையாடிவரும் வீடியோக்கள் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. சக போட்டியாளர்களிடம் கலகலவென்று பேசும் மைனா, வீட்டின் உள்ளே இருக்கும் கேமராவிடம் அதே பாணியில் பேசியிருக்கிறார்.
கேமரா முன்பு நிற்கும் மைனா அதனை பார்த்து,"டேய் குட்டப்பா பேசுடா. பேச மாட்டியா? அப்டினா தலையாவது ஆட்டு. ஆட தெரியாதா ஒரே இடத்துல தான் நிப்பியா நீ" என சிரித்தபடி பேசுகிறார்.