BIGG BOSS 6 TAMIL : “மன்னிப்பு கேட்டும் அதிகாரம் பண்றாரு”.. பரபரப்பான 3வது வார நாமினேஷன்.. !!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | சிவகார்த்திகேயனுக்கு நா. முத்துக்குமார் மகன் கொடுத்த நெகிழ்ச்சியான GIFT.. பின்னணி தகவல்!

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார்.

இதனிடையே தீபாவளி நேரத்தில் வந்த 3வது வாரத்துக்கான நாமினேஷன் ரவுண்டில், போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் 2 பேரை நாமினேட் செய்ய வேண்டும் என சொல்லப்பட்டது. இதில் பலரும் அசீமை நாமினேட் செய்திருந்தனர்.

அதன்படி அசீம் மன்னிப்பு கேட்டும் அதிகாரம் பண்ணுகிறார் என்றும் விக்ரமன் நாமினேட் செய்தார். தொடர்ந்து ரச்சிதா , ஏடிகே , மைனா, ஆயிஷா, கதிரவன் ஆகியோர் அசீம் பேசியது தவறு என்றும், எனினும் அசீம் தற்போதும் மாறாமல் இருப்பதாக சொல்லி நாமினேட் செய்தனர்.   விக்ரமன், அசீம் , மைனா ஆகியோர் மகேஸ்வரி மிகவும் சென்சிடிவாக ஒவ்வொன்றையும் எடுத்துக்கொண்டு ஃபீல் பண்ணுகிறார், அதனால் டாஸ்க்கிலோ, விளையாட்டிலோ கவனம் செலுத்துவதில்லை என்றும் குறிப்பிட்டு நாமினேட் செய்துள்ளனர்.

இதையெல்லாம் கேட்ட பிக்பாஸ், அசீம், மகேஸ்வரி, ஆயிஷா, அசல், ரச்சிதா, ஜனனி, ஏடிகே ஆகியோர் இந்த வார நாமினேஷனில் இருப்பதாக அறிவித்தார்.  தவிர ராம் ராமசாமி உள்ளிட்டோரின் பெயர் நாமினேஷனில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | பிரபல நடிகை பூர்ணா திருமணம்.. மாப்பிள்ளை இவரா? வைரலாகும் கல்யாண போட்டோஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

Bigg boss 6 tamil housemates 3rd week nomination

People looking for online information on Ayesha, Azeem, Bigg boss 6 tamil, Janani, Vijat tv will find this news story useful.