BIGG BOSS 6 TAMIL : அசுரத் தனமாக மோதிய அசீம் & விக்ரமன் .. ஆரத்தழுவி சமாதானம்.! நடந்தது என்ன?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertising
>
Advertising

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

பிக்பாஸ் வீட்டை பொருத்தவரை தற்போது சண்டை , சச்சரவுகள் , கலவரங்கள், களேபரங்கள் அனைத்துமே சூடுபிடித்து இருக்கின்றன. குறிப்பாக அசீம் - விக்ரமன் மோதல், தனலட்சுமி - அசல் கோலார் மோதல், ஆயிஷா - அசீம் மோதல் என பலவிதமான மோதல்கள் உருவெடுத்தன.

இதில் அனைவரும் ரேங்கிற்காக ஒவ்வொரு எண்ணில் நின்றுகொண்டிருந்தனர். மற்றவர்கள் தாங்கள் ஏன் அந்த ரேங்கிற்கு தகுதி உடையவர்கள் என்று விளக்கி ஓட்டு கேட்டு ஜெயிக்கலாம். இதேபோல் மற்றவர்கள் ஏன் தகுதியில்லாதவர்கள் என அதுகுறித்த காரணங்களை விளக்கலாம். இறுதியில் இவர்களை வெடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நாமினேஷன் ஃப்ரீ ஸோன் போட்டியாளர்கள் ரேங்கிங் அடிப்படையிலும் ஓட்டின் அடிப்படையிலும், சிறை செல்லும் போட்டியாளர்கள் யார் என தீர்மானிப்பர். இதேபோல் தரவரிசையையும் தீர்மானிப்பர்.

சீம், விக்ரமன் உட்கார்ந்து தூங்குவதாக குறிப்பிடுகிறார். பின்னர் பேசும் விக்ரமன், "நீ என்ன வேல பண்ணிட்டு இருக்கே" என கேட்கிறார். தொடர்ந்து, "யோவ் நீதான்யா தூங்கிட்டு இருக்கே. நான் தூங்குனதே இல்ல" என அசீம் சொன்னதும், "யோவ்ன்னு எல்லாம் பேசாத" என விக்ரமன் குறிப்பிடுகிறார். இதன் பின்னர் பேசும் அசீம், "டேய், வேலைய பாருடா போடா டேய்" என்றதும் வாக்குவாதமும் அங்கே உருவாகிறது. "நீ பெரிய இளவரசர் மாதிரி வர்றே. வாடா, போடாங்குறே" என விக்ரமன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, "நான் தெரியாம தான் கேக்குறேன், வெள்ளை சட்டை போட்டா அரசியல்வாதின்னு சொல்லிட்டு இருக்குறே. சத்தியமா புரியல எனக்கு" என அசீம் பதில் கருத்து சொல்லுகிறார்.

தொடர்ந்து, விக்ரமன் மற்றும் அசீம் ஆகிய இருவரும் மாறி மாறி வார்த்தைகளை விட போட்டியார்களும் இருவரை தடுக்க முயற்சி செய்கின்றனர்.  பின்னர் நாமினேஷன் ஃப்ரீ ஸோனில் இருந்த மைனா, ஷிவின் , மணிகண்ட ராஜேஷ், தனலட்சுமி, அமுதவாணன், ராபர்ட் உள்ளிட்டோரால் அசீம் மற்றும் விக்ரமன் இருவரையும் சிறைக்கான ரேங்க்கிங்கில் வைப்பதாக யோசித்தனர். இதனை ஷிவின் அறிவித்தார். அப்போது அசீம், “இதுல நடுநிலையே இல்லையே?.. காரணமே இல்லாம இருக்கு. ஆயிஷா என்கிட்ட ஷூவ காட்டினத பத்தி பேசாம, நான் வாடி போடினு சொன்னத மட்டும் வெச்சு இப்படி பண்றீங்க.. நான் ஆண் அப்படிங்குறதுனாலயும், ஆயிஷா பெண் அப்படிங்குறதுனாலயும் இந்த சார்புநிலை முடிவா?” என கொந்தளித்தார்.

கடைசியாக ராம் மற்றும் ஜனனி சிறைக்கு போக வேண்டும் என நாமினேஷன் ஃப்ரீ ஸோன் போட்டியாளர்கள் தேர்ந்தெடுத்து அவர்களை சிறைக்கு அனுப்பினர். இதன் பின்னர் விக்ரமன் மற்றும் அசீம் இருவரும் ஒருவரை கட்டிப் பிடித்து சமரசமாக பேசிக்கொண்டனர். ஒருவரை ஒருவர் அப்படி பேசியதற்காக, “அதெல்லாம் விடுங்க.. அதேல்லாம் ஒண்ணுமில்ல..” என சமாதானமான வார்த்தைகளை ஜாலியாக பேசி நகர்ந்தனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Bigg boss 6 tamil azeem vikraman fight and compromise

People looking for online information on Azeem and vikraman fight, Azeem vikraman, Azeem vikraman fight, Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6 will find this news story useful.