"உங்களுக்கு நாலேஜ் கிடையாது.. ஜட்ஜ்மெண்ட்ல ஜீரோ"... அசீம் VS மகேஸ்வரி .. வார்த்தைப் போர்!. BIGG BOSS 6 TAMIL

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகனை வாழ்த்திய ஐஸ்வர்யா! என்ன சொல்லிருக்காங்கனு பாருங்க!

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார்.  இந்நிலையில் இதற்கு அடுத்த கட்டமாக அக்டோபர் 30-ஆம் தேதி ஒளிபரப்பான எபிசோடில், அசீமா? அசலா? மகேஸ்வரியா? யார் வெளியேற்றப்படவிருக்கிறார்கள் என பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருந்தது, முதலில் மகேஸ்வரி எலிமினேட் செய்யப்படவில்லை என கமல் அறிவித்தார்.  இறுதியாக அசல் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.

இந்த நிலையில் பிக்பாஸ், வீட்டுக்குள் மகேஸ்வரி மற்றும் அசீம் இருவருக்கும் இடையிலான மோதல் மீண்டும் விஸ்வரூபமாக உருவெடுத்திருக்கிறது. பிக் பாஸ் வீட்டுக்குள் தற்போது டிவி டாஸ்க் நடந்து கொண்டிருக்கிறது. அதன்படி போட்டியாளர்கள் அந்த டிவி, இந்த டிவி என இரு வகையாக பிரிக்கப்பட்டு அதற்குரிய டாஸ்குகளை செய்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக பிரேக்கிங் நியூஸ் வாசிக்கக்கூடிய நிகழ்வு அரங்கேறியது. இதை விக்ரமன், ஜனனி ஆகியோர் கொண்ட அணி செய்தனர். அதன் பிறகு மகேஸ்வரி இதுகுறித்த தம்முடைய ஜட்ஜ்மெண்ட்டை வெளியிட்டார். இது குறித்து விக்ரம் மற்றும் மகேஸ்வரி இருவருக்குமிடையே வாதம் எழுந்தது. அதில் மகேஸ்வரி பிரேக்கிங் செய்தியை தெளிவு படுத்தாமல் விட்டுவிட்டதாக தன்னுடைய வாதத்தை முன்வைத்தார். இதற்கு காரணம் நீங்கள் சரியாக கேட்காது தான் என்று விக்ரமன், அமுதவாணன் ஆகியோர் மகேஸ்வரியிடம் வாதமிட்டனர். ஆனால் மகேஸ்வரியும் தம்முடைய கருத்தில் உறுதியாக இருந்தார். அப்போது விக்ரமன் சார்பில் அசீம், மகேஸ்வரியிடம் வாதம் செய்துவிட்டு சென்றார். அப்போது நீங்கள் அதை பார்க்கவில்லை, பார்த்திருந்தால் இப்படி பேசி இருக்க மாட்டீர்கள் என்று மகேஸ்வரி கூறினார். ஆனால் மகேஸ்வரி சொன்னது அசீம்க்கு தெரியாது. அதை விக்ரமன் அசீமிடம் கூற, அதை எடுத்துக்கொண்டு மகேஸ்வரியிடம் சென்று அசீம் சண்டையிட்டார்.

பின்னர் வாக்குவாதத்தில் ஈடுபடும் மகேஸ்வரியிடம், உங்களுக்கு நாலேஜ் கிடையாது என்று அசீம் கூற, அப்படியானால் உங்களுக்கு நாலேஜ் இருக்கிறது அல்லவா ? அப்படியானால் ஒரு பிரேக்கிங் செய்து எப்படி இருக்க வேண்டும் என்று ஏன் தெரியவில்லை என்று மகேஸ்வரி கேள்வி எழுப்புகிறார். அதற்கு மீண்டும் அசீம், ஜட்ஜ்மெண்ட்டில் நீங்கள் ஜீரோவாக இருக்கிறீர்கள் என்று மகேஸ்வரியிடம் கூறுகிறார். இதை அடுத்து இருவரும் பிக் பாஸ் வீட்டில் மேலோங்கிய குரலில் சண்டை இடுகின்றனர். இது தொடர்பான சண்டைகளில் இந்த வார இறுதிக்குள் ஒரு முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவர்களின் சண்டை வெள்ளிக்கிழமை பார்த்து பெரிதாகி இருப்பது இன்னும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read | THUNIVU: 'துணிவு' படத்தின் ப்ரோமோ பாடல்.. களமிறங்கும் பிரபல நடன இயக்குனர்! தெறி அப்டேட்

தொடர்புடைய இணைப்புகள்

Bigg boss 6 tamil azeem maheswari fight in tv task

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil 6, Vijay tv will find this news story useful.