BIGG BOSS 6 TAMIL : மயங்கி விழுந்த ஆயிஷா.. சண்டையை மறந்து தூக்கிக் கொண்டு ஓடிய அசீம்.! பிக்பாஸில் பரபரப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | Bigg boss 6 tamil : “மன்னிப்பு கேட்டும் அதிகாரம் பண்றாரு”.. பரபரப்பான 3வது வார நாமினேஷன்.. !!

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார்.  இதனிடையே தற்போது 3வது வாரத்தை ஒட்டி நடந்த நாமினேஷன் டாஸ்கில் அசீம் ஆயிஷாவையும், ஆயிஷா அசீமையும் நாமினேட் செய்தனர்.

முன்னதாக அசீம்க்கும் ஆயிஷாவுக்கும் நடந்த சண்டை பிக்பாஸ் வீட்டில் பெரிய சண்டையாக இருந்தது. அதில் அசீம் ஆயிஷாவை வாடி, போடி என்று சொன்னதும், பதிலுக்கு ஆயிஷா அசீமை நோக்கி செருப்பை கழட்டியதும் பரபரப்பானது. பின்னர் இருவரையும் ஹவுஸ் மேட்ஸ் சமாதானம் செய்தனர். ஆனாலும் வார இறுதியில் அசீம் தன் தவறுகளுக்கும், ஆயிஷா தன் தவறுக்கும் மன்னிப்பு கேட்டனர். இதற்கும் முன்னதாக பிக்பாஸ் வீட்டுக்குள்ளேயே இருவருமே ஒருவருக்கொருவர் மன்னிப்பும் கேட்டிருந்தனர்.

எனினும் கமல்ஹாசன், அசீம் செய்த தவறு குறித்து அவருக்கு அறிவுரை கூறினார். மேலும் நிகழ்ச்சியின் தரத்தை குறைக்காமல் அனைவரும் அனைவரையும் மரியாதையுடன் நடத்துங்கள் என்று கூறியிருந்தார். இந்நிலையில் ஆயிஷா பிக் பாஸ் வீட்டில் மீண்டும் மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளார். அவரை உடனே மருத்துவ சிகிச்சை கொடுப்பதற்காக அசீம் குண்டுகட்டாக தூக்கி சென்றார். இந்த விவகாரம் பிக்பாஸ் வீட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | பிரபல நடிகை பூர்ணா திருமணம்.. மாப்பிள்ளை இவரா? வைரலாகும் கல்யாண போட்டோஸ்!

BIGG BOSS 6 TAMIL : மயங்கி விழுந்த ஆயிஷா.. சண்டையை மறந்து தூக்கிக் கொண்டு ஓடிய அசீம்.! பிக்பாஸில் பரபரப்பு வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Bigg boss 6 tamil ayesha health issue azeem helped

People looking for online information on Ayesha, Azeem, Bigg boss 6 tamil, Janani, Vijat tv will find this news story useful.