நேற்று தனக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் கமல் நிகழ்ச்சியை போரடிக்காமல் கொண்டு சென்றார். இடையிடையே அவர் வீசிய அரசியல் பஞ்ச்களும் காரசாரமாகவே இருந்தன. பாலாஜி-சனம் ஷெட்டி இடையிலான 'மாடலிங்' பிரச்சினை நேற்றும் தொடர்ந்தது.
யார் தலையிட்டாலும் இருவரும் மீண்டும், மீண்டும் அதுபற்றியே பேசி சண்டைக்கு ஆயத்தமாகினர். இந்த பிரச்சினையை கையில் எடுத்த கமல் இன்று பாலாஜியிடம் அவரின் தப்பை எடுத்து கூறினார். உங்களின் கதையை கேட்டேன். நீங்கள் இந்நேரம் பலருக்கு ஹீரோவாகி இருப்பீர்கள். பொறுப்புடன் பேசவேண்டும்.
பல பேருக்கு அந்த போட்டியில் பங்கேற்றது பெரிய சாதனையாக இருக்கும்.
அதனை நீங்கள் டுபாக்கூர் என்பது மற்றவர்களை காயப்படுத்தும். டுபாக்கூர் என்னும் வார்த்தைக்கு எனக்கே அர்த்தம் தெரியாது. முன்னெல்லாம் உங்கள மாதிரி பாடி பில்டர்களை குஸ்திகாரர்கள் என்பார்கள். மரியாதையே இருக்காது. உங்களை என்ன பாடி பில்டர் ஊசி போட்டா உடம்பு வந்துரும் என யாராவது பேசினால் உங்களுக்கு கஷ்டமாக இருக்காதா?
அதனால் இனிமேல் இது நிகழாமல் பார்த்து கொள்ளுங்கள் என கூற , அவரின் முகமே மாறிவிட்டது. நேற்று கைதட்டி உற்சாகமாக இருந்தவர் இன்று அமைதியாகி விட்டார். வரும் நாட்களில் இந்த மாடலிங் பிரச்சினையை வைத்து பாலாஜி-சனம் மீண்டும் மோதிக்கொள்ள வாய்ப்புகள் இருக்கின்றன. என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.