நேற்றைய பிக்பாஸ் வீட்டில் ஷிவானியை அனைவரும் கார்னர் செய்ய, அவரது ஆர்மி பொங்கி எழுந்து மற்ற போட்டியாளர்களை வறுத்தெடுக்க ஆரம்பித்து இருக்கின்றனர். குறிப்பாக யாருடனும் மிங்கிள் ஆக மாட்டேன் என்கிறார் என்பது தான் அவர்மீதான மிகப்பெரிய குற்றச்சாட்டாக உள்ளது.

ஆனாலும் வரும் நாட்களில் அவர் மிகவும் வலிமையான போட்டியாளராக உருவெடுப்பார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவரது ரசிகர்களுக்கு ஷிவானி ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ் தந்திருக்கிறார். நல்ல டான்சர், நடிகை என்பதை தாண்டி அவருக்கு நன்றாக பாடவும் தெரியும் என்பது தான் அது.
சக போட்டியாளரான சுரேஷ் சக்கரவர்த்தி உடன் கார்டனில் நடந்த ஷிவானி கமலின் குணா படத்தில் இருந்து 'கண்மணி அன்போட காதலன்' பாடலை பாடினார். இதைக்கேட்ட ரசிகர்கள் உங்களுக்கு இவ்ளோ நல்லா பாட வருமா? என விதவிதமாக ஹார்ட்டுகள் போட்டு அவரை பாராட்டி வருகின்றனர்.