நேற்றைய பிக்பாஸிலும் சனம் ஷெட்டி -பாலாஜி முருகதாஸ் இடையிலான மாடலிங் பிரச்சினை தீரவில்லை. நேற்று முன்தினம் பாலாஜிக்கு ஆதரவு கொடுப்பது போல பேசிய கமல் நேற்று சனம் ஷெட்டிக்கு ஆதரவு அளித்தார். டுபாக்கூர் போன்ற வார்த்தைக்கு எனக்கே அர்த்தம் தெரியாது எனவும் பாலாஜி முருகதாஸிடம் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து பேசும்போது கடந்த வார பிக்பாஸ் வீட்டின் கேப்டன் ரம்யா பாண்டியனிடம், கமல் விசாரணை நடத்தினார். அப்போது ரம்யாவிடம் பேசிய அவர் நீங்கள் தவறான பக்கம் இருந்தீர்கள் என்பதையும் எடுத்து உரைத்தார். ரம்யா என்ன நடந்தது என்பது முழுமையாக தெரியாமல் பாலாஜி முருகதாஸ்க்கு ஆதரவாக இருந்ததை தான் கமல் அவருக்கு சுட்டிக்காட்டினார். நான் பார்த்துட்டு தான் இருக்கேன் என அவர் சொன்ன விதம் சிறப்பாக இருந்தது.
Tags : Ramya Pandian