பிக்பாஸ் வீட்டில் தற்போது அடைந்துவந்த கொலைகாரன்-பேய் டாஸ்க் நேற்று முடிவுக்கு வந்தது. அப்போது வனிதா கொலைகாரி என அனைத்து போட்டியாளர்களுக்கு காட்டப்பட்டது.

அதன்பிறகு சிறப்பாக டாஸ்க் செய்த மூன்று பேரை தேர்ந்தெடுக்க சொல்லப்பட்டது. அப்போது மோகன், வனிதா, சாக்ஷி ஆகியோரின் பெயர் தேர்வு செய்யப்பட்டது. அவர்கள் மூவரும் அடுத்த வார தலைவர் போட்டியில் பங்கேற்கவுள்ளனர் என அறிவிக்கப்பட்டது.
மேலும் சரியாக டாஸ்க் செய்யாத இருவரை தேர்ந்தெடுத்து ஜெயிலுக்கு அனுப்பவேண்டும் என கூறப்பட்டது. அப்போது சேரன் மற்றும் சரவணன் ஆகியோரின் பெயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இதனால் கோபமான சரவணன் மற்ற போட்டியாளர்கள் கோபமாக திட்டினார். அப்போது லாஸ்லியா நான் ஜெயிலுக்கு போகிறேன் என கூறினார். அதன்பிறகு அவரை வனிதா திட்டியதால் டென்ஸனான ஆவர் பாத்ரூம் சென்று கதறி அழுதார். கவின் அவரை சென்று சமாதானப்படுத்த முயன்றார்.
இதுபற்றிய வாக்குவாதம் நடந்துகொண்டிருந்தது, நிகழ்ச்சியும் முடிவுக்கு வந்துவிட்டது. ஜெயிலுக்கு யார் போகப்போவது என நாளை தான் தெறியவரும்.