பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் இன்றைய நிகழ்ச்சிக்கான புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில் முதலாவதாக ஃபாத்திமா பாபு வெளியேறினார். அவரைத் தொடர்ந்து இந்த வாரம் எலிமினேஷனுக்கு சரவணன், மோகன் வைத்தியா, மதுமிதா, வனிதா, மீரா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியானது. இதில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் மகிழ்ச்சியாக சந்தோஷமாக பாட்டு பாடி குதூகலிக்கின்றனர்.
"எங்கள் வீட்டில் எல்லா நாளும் சண்டைதான்....சண்டையில் ஒடஞ்சது சாண்டியோட மண்டதான்.... என்ன நடந்தாலும் யார் போனாலும் உயிர் கொடுப்பது நீங்கள் தான் உயிரை எடுப்பதும் நீங்கள் தான்" என பாட்டு பாடி செம்ம ஃபன் செய்துள்ளனர். இதனை எடிட்டர் வேற லெவலில் வச்சு செஞ்சுட்டார்.