பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிராமத்து டாஸ்க் என்றாலே போட்டியாளர்கள் அஞ்சி நடுங்குவார்கள் என்பது கடந்த முறை நடந்த கிராமத்து டாஸ்க் மூலம் தெரிய வந்தது. கடந்த முறை நடந்த கிராமத்து டாஸ்க்கில் சேரன் மற்றும் மீராமிது இடையே நடந்த சண்டையை இன்னும் யாராலும் மறக்க முடியாது.

இந்த நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில் மீண்டும் கிராமத்து டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் வீடு இரண்டு கிராமங்களாக பிரிந்து உள்ளதாகவும் அதில் கலந்துகொண்ட 8 போட்டியாளர்கள் நான்கு நான்காக பிரிந்து இருபிரிவாக இருக்கிறார்கள்
இதனை அடுத்து பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கிராமத்து கலையை கற்றுக்கொடுக்க புதிய விருந்தாளில் ஒருவர் வீட்டிற்கு வந்துள்ளார். அவரிடம் கலையை கற்றுக்கொள்ளும் போட்டியாளர்கள் மாலையில் அரங்கேற்றம் செய்ய வேண்டும் என்பது பிக்பாஸ் நிபந்தனைகளில் ஒன்றாக உள்ளது. இந்த டாஸ்க்கில் சேரன் மற்றும் சாண்டி அசத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இரண்டாவது புரமோ வீடியோவில், டாஸ்க்கின் போது கவின், லாஸ்லியா அருகே படுத்திருக்கிறார். இதைப்பார்த்த வனிதா லாஸ்லியாவின் காதைப் பிடித்து திருகி, கவினை அடிக்க கை ஓங்குகிறார்.
அதைத்தொடர்ந்து குடும்ப மானம் கெட்டுப் போய், சந்தி சிரிச்சிடும் என்று வனிதா கூற, கவினை 3 வருடத்துக்கு வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று சேரன் கூறுகிறார். இதைவைத்து பார்க்கும் போது முகென் - அபிராமி உறவுக்கு முற்றுப்புள்ளி வைத்த வனிதா தற்போது கவின் - லாஸ்லியா பக்கம் திரும்பியுள்ளது தெரிய வருகிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.