தொலைக்காட்சி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 'பிக்பாஸ் 3' நிகழ்ச்சி நேற்று தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 15 ப்போட்டியாளர்களளயும் நேற்று கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார். கிட்டத்தட்ட ஏற்கனவே வெளியான செய்திகளில் இருந்தவர்கள்தான் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிகழ்ச்சியில் செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு, இலங்கை தமிழ்ப்பெண் லொஸ்லியா, நடிகை சாக்சி அகர்வால், நடிகை மதுமிதா, நடிகர் கவின், நடிகர் சரவணன், நடிகை அபிராமி வெங்கடாச்சலம், நடிகை வனிதா விஜயகுமார், இயக்குனர் மற்றும் நடிகர் சேரன், நடிகை ஷெரின், நடிகர் மற்றும் இசைக்கலைஞர் மோகன் வைத்யா, இலங்கை மாடல் தர்ஷன், நடன இயக்குனர் சாண்டி, மலேசிய மாடல் முகன்ராவ் மற்றும் நடிகை ரேஷ்மா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
முதல் நாளில் போட்டியாளர்கள் அறிமுகம் மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது. இன்று முதல் வழக்கமான சுவாரஸ்ய நிகழ்வுகள், நட்பு, பிரச்சனை, சண்டைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இன்று ஒளிபரப்பாகும் தொடரின் ப்ரோமோ வெளியாகியள்ளது