தமிழ் பொண்ணு பிரச்சனையால் நொந்து போயுள்ள மதுமிதா ரொம்ப ஃபீல் பண்ணி பேசிய ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து யாராவது இந்த வாரம் வெளியேற்றப்பட வேண்டும். அதற்கான நாமினேஷன் வேலை துவங்கியது தொடர்பாக இரண்டு ப்ரொமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டன.
இந்நிலையில் வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரொமோ வீடியோவில் மதுமிதா புலம்பிக் கொண்டிருக்கிறார்.
கரெக்டா இருந்தாலே இந்த ஊர்ல பிரச்சனை தான் என்று கவின் கூறுவதுடன் ப்ரொமோ வீடியோ துவங்குகிறது. நான் அதற்கு வருத்தமே படவில்லை. என்னுடைய பார்வை தவறாக இருக்கிறது. இங்கு எல்லாருமே கரெக்டாத் தான் இருக்காங்க. எல்லாரும் கேம் விளையாடுறாங்க, நான் தான் இன்னும் கேமுக்குள்ளேயே வராமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று மதுமிதா தெரிவிக்க கவினோ ரொம்ப பண்றீங்க நீங்க என்கிறார். மதுமிதா தமிழ் பொண்ணு, கலாச்சாரம் என்று பேச ஆளாளுக்கு அவரை விளாசிவிட்டார்கள். அதன் பிறகே இப்படி சோக கீதம் பாடுகிறார்.