விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 5 நாட்கள் ஆகின்றன. முதல் இரண்டு சீசன்களை போல் இந்த சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார்.

இந்த சீசனில் 16 போட்டியாளர்கள் தற்போது பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். இதில் நடிகையும், மாடலுமான சாக்ஷி அகர்வாலின் குடும்பத்தினர் Behindwoods-க்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளனர்.
Behindwoods-ன் பெர்சனல்ஸ் வித் தாரா நிகழ்ச்சியில், கலந்துக் கொண்டு பேசிய சாக்ஷியின் பெற்றோர் மற்றும் தங்கை உரையாடினர். ‘பொதுவாக சாக்ஷி கோபக்காரி இல்லை. ஆனால் கோபப்பட்டால் அவ்வளவு தான். சாப்பாட்டில் மிகவும் அக்கறை எடுத்துக் கொள்வார். வீட்டில் இருப்பதுபோல் தான் அவர் பிக் பாஸ் வீட்டிலும் இருக்கிறார். இன்னும் ஒரு சில வாரங்கள் கடந்தால் தான் எதுவும் கூற முடியும்’ என்றனர்.
மேலும், பிக் பாஸ் வீட்டில் எழுந்த பொங்கல் தகராறு குறித்து கேள்வி கேட்டபோது, நீங்க ஏன் இந்த கேள்வி கேக்குறீங்க..? பொங்கல் சாக்ஷிக்கு பிடிக்கும் சாப்பிடுவார். ஆனால் ஒரு நாளைக்கு 3 வேளையும் பொங்கல் என்றால் யாருக்குமே பிடிக்காது. பொங்கலில் நெய் சேர்ப்பதால் அவர் அதை அதிகம் விரும்பி சாப்பிடமாட்டார்’ என அவரது பெற்றோர்கள் கூறினர்.
பிக் பாஸ் வீட்டில் சாண்டி தான் தற்போது ஸ்ட்ரேட்டஜியுடன் இருப்பது போல் தெரிவிதாகவும், யாரை பற்றியும், சாக்ஷி பற்றியும் ஓரிரு வாரங்கள் சென்றால் தான் சொல்ல முடியும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.