OFFICIAL: சேரப்பாவை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டுக்கு BYE BYE சொன்ன கவின்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எவிக்‌ஷனுக்கு முன்பாகவே கவின் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்

Bigg Boss 3 Kavin evicted officially Vijay Tv Losliya

 கவின் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். மற்ற போட்டியாளர்கள் அவரை தடுத்து நிறுத்த முயற்சித்தாலும் அவர் கேட்பதாக இல்லை. தான் எப்போதோ எடுத்த முடிவு இது, மாற்றமுடியாது என கூறினார் கவின். "நீ இப்படி வெளியே போனால், நானும் ஒரு முடிவெடுப்பேன்.." என லாஸ்லியா கவினிடம் கோபமாக பேசினார் லாஸ்லியா.

ஒரு கட்டத்திற்கு மேல் கதறி அழ ஆரம்பித்துவிட்டார். நீ வெளியே போகாதே என தொடர்ந்து கூறிய லாஸ்லியாவிடம் "நீ எதற்காக இங்க வந்த.. அந்த போட்டோவை பாரு" என கூறி லாஸ்லியாவின் அப்பா போட்டோவை எடுத்து கொடுத்தார்.

"இன்னும் 3 நாட்கள் உங்களால் பொறுக்க முடியாதா? நீ வெளியே போனால், நானும் வெளியே போகிறேன்.." என லாஸ்லியா அழுதுகொண்டே கூறினார். இருப்பினும் கவின் கேட்காமல் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றுவிட்டார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss 3 Kavin evicted officially Vijay Tv Losliya

People looking for online information on Bigg boss, Kavin will find this news story useful.