'சரவணன் மீனாட்சி' தொடரின் மூலம் வேட்டையனாகவே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த கவின் 'நட்புனா என்னனு தெரியுமா ?' படத்தின் மூலம் ஹீரோவானார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், தனது இயல்பான நடவடிக்கைகளால் ஏராளமான ரசிகர்களை பெற்றார்.

இதனையடுத்து அவர் 'லிஃப்ட்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக 'பிகில்' புகழ் அம்ரிதா நடித்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புது கெட்டப்பில் இருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார். அதில், ''மீசை தாடி ஷேவ் பண்ணதுக்கு காரணம் திரும்ப வளரும் என்ற காரணத்தால் தான். போன வந்து தான் ஆகும். வந்தா போய் தான் ஆகும்'' என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு 'கனா' பட ஹீரோ தர்ஷன் 'சூப்பர்' என்று கமெண்ட் செய்திருந்தார். அதற்கு பதிலளித்த கவின், ''ஒரு ஆம்பளளையோட கஷ்டம் இன்னொரு ஆம்பளைக்கு தான தெரியும்'' என்று கமெண்ட் செய்திருந்தார்.