கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது. குறிப்பாக மூன்றாவது சீசன் காதல், சண்டை உள்ளிட்ட விஷயங்களால் மற்ற சீசன்களை காட்டிலும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

ஏற்கனவே ரசிகர்களிடையே பரீட்சையமான கவின், பிக்பாஸில் அவரது நடவடிக்கைகளால் சமூக வலைதளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டார். ஒவ்வொரு வாரமும் எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்ட அவர், ரசிகர்களால் காப்பாற்றப்பட்டு வந்து ஆச்சரியம் அளித்தார். இந்த சீசனில் கவின், லாஸ்லியா, முகேன், சாண்டி, தர்ஷன் ஆகிய 5 பேர் கொண்ட வி ஆர் தி பாய்ஸ் கேங் மிகவும் பிரபலம்.
இந்நிலையில் ஒருவழியாக கடந்த அக்டோபர் 6 ஆம் தேதியுடன் பிக்பாஸ் முடிவடைந்தது. இதனையடுத்து வீர் தி பாய்ஸ் கேங்கான தர்ஷன், கவின், சாண்டி, முகேன் உள்ளிட்டோர் விஜய் டிவியில் ஒளிபரப்பான வீ ஆர் தி கேங் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது கவின் வனிதா முகம் பதிவிடப்பட்ட டி ஷர்ட்டை அணிந்திருந்து வனிதா போல் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ரசிகர் ஒருவர் வனிதாவின் ட்விட்டர் பக்கத்தை அதில் குறிப்பிட்டார். அந்த வீடியோவை பகிர்ந்த வனிதா, கவின் தம்பி, டேய், கொண்டாட்டம்ல பார்த்துக்கிறேன் உன்ன'' என்று கருத்து தெரிவித்தார்.