தமிழ் சினிமாவில் 'பொற்காலம்', 'வெற்றிக்கொடிகட்டு', 'ஆட்டோகிராஃப்' உள்ளிட்ட யதார்த்தமான படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் சேரன். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவரது நடவடிக்கைகள் மிகுந்த வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இயக்குநர் சேரன் தற்போது Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது அவரிடம் பிக்பாஸில் தேவர் மகன் 2 பற்றி தெரிவித்தது குறித்து தொகுப்பாளர் அக்னி கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அவர், அன்று எனக்கும் லாஸ்லியாவிற்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் நான் மனநிலையில் பாதிக்கப்பட்டிருந்த நாள். அப்போது 8 கார்டு கொடுத்து சிறுகதை சொல்ல சொன்னாங்க. மனநிலை சரியில்லாத காரணத்தால என்னால கதையை யோசிக்க முடியவில்லை. அப்போ கமல் சார், எப்பொழுதுமே ஒரு கதை சொல்லியா காட்டிக்கொள்ள பிரியப்படுகிறவர்.
ஆனால் அவரால் சொல்ல முடியாத அளவிற்கு நான சந்தர்ப்பத்தில் அவரை கொண்டுவந்திட்டீங்க என்றார். அப்போ கதைலாம் பண்ணுவேன் சார். தேவர் மகன் 2 லாம் பண்ணி வச்சுருக்கேன். அதைக் கேட்டு அவர் சந்தோஷப்பட்டாரு. வெளியில் வந்து பேசுவோம் என்றார். இன்னும் அதற்கான சந்தர்பம் வரவில்லை என்றார். நேரம் அமைந்து பேசி, அதற்கு அவர் ஒத்துவந்தால் நடக்கும். அந்த பிராஸஸ் பெரியதாக இருக்கிறது. இப்போதைக்கு அவருக்கு கடமைகளும் பெரியதாக இருக்கிறது. 'தேவர் மகன் 2'விற்கு காலமும் அவர் மனதும் இடம் கொடுத்தால் மட்டுமே அதற்குள் போக முடியும்'' என்றார்.
இப்போ ராஜாவுக்கு செக் என்ற படத்தில் நடித்திருக்கிறேன். நான் படம் பார்த்துட்டேன். படம் பார்க்கும் போது எனக்கே பிரம்மிப்பாக இருந்தது. ரொம்ப நல்லா வந்திருக்கு. நாமும் நல்லா நடித்திருக்கோமே என்று உள்ளுர திருப்தியை கொடுத்திருக்கிறது. இந்த படம் நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பரில் வெளியாகும். அதன் பிறகு நடிகராக சில படங்கள் பேசிட்டு இருக்காங்க.
இப்போ விஜய் சேதுபதியை வைத்து நான் எடுக்க போகும் படத்தின் மீது கவனம் செலுத்தி வருகிறேன். இந்த படம் குறித்து 3 வருடம் அவர் கூட டச்ல இருக்கேன். அவரும் நானும் இணைந்து நாட்கள் முக்கியமான திரைப்படம் உருவாக்கும் காலகட்டமாக இருக்கும்'' என்றார்.