உதயநிதி படத்தில் இணைந்த பிக்பாஸ் டைட்டில் வின்னர்?? இணையத்தில் பரவும் வைரல் ஃபோட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் மகிழ் திருமேனி கடைசியாக நடிகர் அருண் விஜய்யை வைத்து இயக்கிய "தடம்" திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் பெயரிடப்படாத புதிய படத்தை மகிழ் திருமேனி இயக்கி கொண்டிருக்கிறார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். மெட்ராஸ் பட புகழ் கலையரசனும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இவர்கள் போக தற்போது புதிதாக, நடிகர் ஆரவ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் போட்டியில் டைட்டில் கார்டு வென்றவர் நடிகர் ஆரவ் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே உதயநிதி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புக்கு நடுவே உதயநிதி ஸ்டாலினுடன் ஆரவ்  எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளன.

உதயநிதியின் இந்த படத்திற்கு அரோல் கொரேலி இசையமைக்கிறார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலினே இந்தப் படத்தை தயாரிக்கிறார். இது தவிர, தற்போது உதயநிதி ஸ்டாலின் கைவசம் கண்ணை நம்பாதே, ஏஞ்சல், ஆர்டிகிள் 15 ரீமேக் உள்ளிட்ட படங்களும் உள்ளன. 

தொடர்புடைய இணைப்புகள்

Bigboss celebrity act with udhaynidhi stalin movie

People looking for online information on Aarav, Kalaiyarasan, Magizh Thirumeni, Nidhhi Agerwal, Thadam, Udhayanidhi Stalin will find this news story useful.