LATEST UPDATE: "விக்ரம்" படத்தில் நடிக்கிறேன்... உறுதி செய்த பிக்பாஸ் நடிகை!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் கமல்ஹாசன் நடிக்கும் "விக்ரம்" படத்தை, மாநகரம், கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர்.

இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக சென்னையில் தொடங்கியது. பின்னர் நடிகர் பஹத் பாசிலும் விக்ரம் பட படப்பிடிப்பில் இணைந்து கொண்டார். இந்த படத்தில் கமல்ஹாசனின் மகனாக நடிகர் காளிதாஸ் ஜெயராமன் நடிக்கிறார்.

இந்நிலையில் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற இருக்கிறது. படத்தில் பங்கு பெறும் CAST & CREWவை இறுதி செய்யும் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்த படக்குழுவினர் தற்போது பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை ஷிவானியை ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பார் என எதிபார்க்கப்படுகிறது.

இதனை நடிகை ஷிவானி தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மூன்று  நாட்களுக்கு முன்பு நமது Behindwoods, விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிக் பாஸ்  ஷிவானி நடிக்கிறார் என முன்னரே அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் படத்திற்கு 'ஜல்லிக்கட்டு' படத்திற்காக தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். 

தொடர்புடைய இணைப்புகள்

Bigboss actress confirmed the vikram movie latest buzz

People looking for online information on Fahad Fazil, Kamal Haasan, Shivaani, Vijay Sethupathi will find this news story useful.