BIG BOSS கவின் நடிக்கும் புதிய படத்தின் ரிலீஸ் அப்டேட்! எப்போ ரிலீஸ் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தற்போது நடிகர் கவின் 'லிஃப்ட்' படத்தில் கதாநாயகனாக நடித்து முடித்துள்ளார். கவினுக்கு ஜோடியாக, அமிர்தா ஐயர் நடித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகழ் பெறுவதற்கு முன்பு, கவின் 'சத்ரியன்' மற்றும் 'நட்புனா என்னனு தெரியுமா' போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் கவின் ஆரம்பத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' சீரியலில் வேட்டையன் கதாபாத்திரம் மூலம் புகழ் பெற்றார்.

இப்படத்தை வினீத் வரபிரசாத் இயக்குகிறார். ஏகா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தால் இந்தப்படம் தயாரிக்கப்படுகிறது. பிரிட்டோ மைக்கேல் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். திரையரங்க வெளியீட்டுக்காக இந்த படம் தணிக்கை செய்யப்பட்டு யு ஏ சான்றிதழ் பெறப்பட்டது.

இந்நிலையில் இன்று தயாரிப்பாளரிடம் இருந்து ஒரு அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதில் இந்தப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாக உள்ளதாகவும், அக்டோபர் ஒன்று முதல் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இந்த படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய இணைப்புகள்

Bigboss actor Kavin lift movie release update

People looking for online information on Amritha Iyer, Kavin will find this news story useful.