BREAKING: இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் அடுத்து இணையப்போகும் தமிழ் ஹீரோ யார்? வேற மாரியான அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தல அஜித்திற்கு மிக முக்கியமான வீரம், வேதாளம், விஸ்வாசம் போன்ற பெரிய வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் சிவா. ஒளிப்பதிவாளராக தனது திரை வாழ்வை தொடங்கியவர். உதவி ஒளிப்பதிவாளராக பத்ரி போன்ற படங்களில் சிவா பணியாற்றியுள்ளார். குறிப்பாக பத்ரி படத்தில் விஜய் பாக்ஸராக மாறும் அந்தப் பாடல் காட்சி முழுவதும் படம் பிடித்தது இயக்குனர் சிவா தான்.

தல அஜித் நடிப்பில் விஜயா புரொடக்ஷன்ஸின் நிறுவனர் நாகி ரெட்டியின் 100வது ஆண்டு விழாவை முன்னிட்டு வீரம் படம் தயாரானது. 2014 பொங்கலுக்கு வீரம் படம் வெளியாகி மெகா ஹிட் ஆனது. 2014  ஆம் ஆண்டு வெளிவந்த படங்களில் அதிக வசூலை குவித்த படங்களில் பட்டியலை இந்திய அரசின் தகவல் தொழில்நுட்ப செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சகம் 2015 ம் ஆண்டு கேன்ஸ் பட விழாவில் வெளியிட்டது. அதில் தமிழக சினிமாவில் அந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த திரைப்படங்களின் வரிசையில் முதலிடம் லிங்கா விற்கும் இரண்டாவது இடம் வீரம் திரைப்படத்திற்கும் மூன்றாவது இடம் கத்தி திரைப்படத்திற்கு அளிக்கப்பட்டது.

2015 தீபாவளிக்கு வெளியானது வேதாளம். ஜூன் மாதம் படப்பிடிப்பு ஆரம்பித்து நவம்பர் மாதம் வெளியானது. அதற்கு முன்பு வரை இருந்த தமிழ் சினிமாவின் ஓபனிங் பாக்ஸ் ஆபீஸ் சாதனைகள் அனைத்தையும் வேதாளம் முறியடித்தது. அதிகபட்ச ஷேர் கொடுத்த திரைப்படமாகவும் அது அமைந்தது. சென்னை வெள்ளத்தையும் கடந்து ஓடியது.

தல அஜித் இயக்குனர் சிவா மூன்றாவது முறையாக இணைந்த விவேகம் கலவையான விமர்சனம் பெற்றது. அஜித் சிவா கூட்டணி நான்காவது முறையாக விஸ்வாசம் படத்தில் இணைந்தது. 2019 பொங்கலுக்கு ரிலீஸ் ஆன விஸ்வாசம் தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் ஆனது. பாகுபலிக்கு அடுத்து அதிக வசூல் செய்த திரைப்படமாக தமிழகத்தில் விஸ்வாசம் அமைந்தது. உலகெங்கிலும் 200 கோடி ரூபாய் வசூல் செய்தது.

தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் "அண்ணாத்த" படத்தை இயக்கி வருகிறார். தீபாவளிக்கு இந்த திரைப்படம் வெளிவருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர், முதல் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இயக்குனர் சிவா அடுத்து பணிபுரியும் நடிகர் யார் என்பது பற்றிய தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே சூர்யா நடிப்பில் சிவா இயக்கும் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது.

பின்னர் சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்தில் பிஸியாக, சிவா அண்ணாத்த படத்தில் பிஸியாக, இந்த படம் தள்ளிப்போனது.

 

இந்நிலையில் ஸ்டூடியோகிரீன் தயாரிப்பில் சூர்யா நடிப்பில் சிவா இயக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதாகவும், இதற்கான செட் அமைக்கும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Big Breaking: This Kollywood hero joining next with Siruthai Siva

People looking for online information on Siruthai Siva, Suriya will find this news story useful.