துல்கர் படத்தில் 'சில்லுனு ஒரு காதல்' பூமிகா-வின் கம்பேக்... ரிலீஸ் எப்போ.?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான்.

Advertising
>
Advertising

Also Read | மருத்துவ சிகிச்சை முடிந்து USA-விலிருந்து இந்தியா திரும்பும் T. ராஜேந்தர்.. முழு விவரம்!

இவர் தெலுங்கின் முன்னணி இயக்குநரான ஹனு ராகவபுடி இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'சீதா ராமம்' எனும் படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர் நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் நடிகை ரஷ்மிகா மந்தானா அழுத்தமான வேடத்தில் நடித்துள்ளார். பி எஸ் வினோத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.

போர்க்கள பின்னணியில் காதலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சி அஸ்வினி தத் வழங்குகிறார். இதனை ஸ்வப்னா சினிமா எனும் நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. 

இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற இரண்டு பாடல்கள்  மற்றும் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.  இப்படத்தில் இடம்பெற்ற 'கண்ணுக்குள்ளே...' எனத் தொடங்கும் மூன்றாவது பாடல் நேற்று முன்தினம் வெளியாகி இருக்கிறது. இதனை  தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டிருக்கிறார்.

காதல் உணர்வு ததும்பும் இந்த பாடலில் நடிகர் துல்கர் சல்மான் மற்றும் பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர் ஆகிய இருவரும் காஷ்மீரின் பனி படர்ந்த பிரதேசத்தின் பின்னணியில் பயணித்துக் கொண்டே தங்களின் அன்பை பகிர்ந்து கொள்வது இளம் பார்வையாளர்களை வசீகரித்திருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தின் புதிய கேரக்டர் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நடிகை பூமிகா சாவ்லா மிருணாளினி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஷ்ணு சர்மாவின் மனைவி என்ற துணைப்பெயருடன் இந்த கேரக்டர் போஸ்டர் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கௌதம் மேனனின் "கேரக்டர் செல்வன்" போஸ்டர் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ரஷ்மிகா மந்தானா ஆகியோர் நடித்திருப்பதால் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் 'சீதா ராமம்' திரைப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

Also Read | இரவின் நிழல் படம் பார்த்த ரஜினி.. பார்த்திபனுக்கு தமிழில் எழுதிய விமர்சனக் கடிதம்!

தொடர்புடைய இணைப்புகள்

Bhumika Chawla as Mrinalini in Sita Ramam starring Dulquer Salmaan

People looking for online information on Bhumika chawla, Dulquer salmaan, Sita Ramam, Sita Ramam Movie Updates will find this news story useful.