கொஞ்ச காலம் முன்ன இதே இயக்குனர்ட்ட உதவியாளர்..! இப்போ அவர் படத்துலயே செம ரோல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மம்முட்டி நடிக்கும் பீஷ்ம பர்வம் படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரை சமூக ஊடகங்களில் மம்முட்டி பிறந்தநாள் சிறப்பாக வெளியிட்டனர்.

Advertising
>
Advertising

அதனைத்தொடர்ந்து பீஷ்ம பர்வம் படத்தின்  கதாபாத்திர போஸ்டரை தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான அமல் நீரத் தன்னுடைய முகநூல், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார். சவுபின் சாகீர் அஜஸ் எனும் கதாபாத்திரத்தில் இந்த படத்தில்ல் நடிக்கிறார். சவுபின் அமல் இயக்கிய அன்வர் படத்தில் இயக்குனருக்கு உதவியாளராக பணியாற்றியவர், தற்போது அதே அமல் இயக்க பீஷ்ம பர்வம் படத்தில் முக்கிய ரோலில் நடித்து தனிப்பட்ட போஸ்டரில் தோன்றியுள்ளார். இந்த படத்தை அமல் நீரத் தனது சொந்த அமல் நீரத் புரொடக்ஷன்ஸ் கீழ் இந்த படத்தை  தயாரிக்கிறார். 

தேவதாத் ஷாஜி, அமல் நீரத் ஆகியோருடன் இணைந்து அமல் நீரத் எழுதிய பீஷ்ம பர்வம் கேங்க்ஸ்டர் டிராமா வகைமையில் இந்தப்படம் உருவாகிறது என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் சவுபின் ஷாஹிர், நதியா மொயுடு, ஷைன் டாம் சாக்கோ, ஸ்ரீநாத் பாசி, ஃபர்ஹான் ஃபாசில், வீணா நந்தகுமார்,  அனசூயா, மாலா பார்வதி மற்றும் லீனா ஆகியோர் மம்முட்டியுடன் இணைந்து நடிக்கின்றனர். பிரேமம் பட ஒளிப்பதிவாளர் ஆனந்த் சி சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

பீஷ்ம பர்வம் படத்தின் படக்குழு படத்தின் அதிகாரப்பூர்வ டீசரை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், மம்முட்டி ரசிகர்கள் போஸ்டர் அப்டேட்டை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகிறார்கள். மேலும் இந்தபடம் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Bheeshma Parvam Character poster Released Soubin Shahir as Ajas

People looking for online information on Amal Neerad, Anend C Chandran, பீஷ்ம பர்வம், மம்முட்டி, Bheeshma Parvam, Mammootty, Mammooty will find this news story useful.