"தமிழ்நாட்டின் சொத்து.!" - இளையராஜா MP பதவி குறித்து பாரதிராஜா பரபரப்பு பேச்சு.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர்   N லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் ராம் பொத்தினேனி நடித்திருக்கிம் ம் அதிரடி திரைப்படம் “தி வாரியர்”. Srinivaasaa Silver Screen சார்பில் ஸ்ரீனிவாசா சிட்துரி தயாரித்துள்ளார். பவன் குமார் இந்தப் படத்தை வழங்குகிறார். இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். ஆதி பினுஷெட்டி வில்லனாக நடித்துள்ளார்.  தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில்  இப்படம் ஜூலை 14 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | பழைய டிரெண்டை மீண்டும் ஆரம்பித்த ராஷ்மிகா மந்தனா.. இணையத்தை கலக்கும் வைரல் போட்டோ!

படத்தின் வெளியீட்டினை ஒட்டி தமிழ் திரை பிரபலங்கள், படக்குழுவினர் கலந்துகொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் கோலகலமாக நடைபெற்றது.  

இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், “இயக்குனர் லிங்குசாமி காதல் உணர்வு அதிகம் கொண்டவர், அதனால்தான் பல விஷயங்களை ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்த முடிகிறது. இந்தப் படத்தில் ராம் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். கீர்த்தி ஷெட்டி இன்னும் பல வருடங்கள் திரையுலகில் ஆதிக்கம் செலுத்தும் நடிகையாக இருப்பதற்கான அனைத்து அம்சங்களும் குணங்களும் கொண்டவராக இருக்கிறார். லிங்குசாமிக்கு அவரைச் சுற்றி நல்ல குடும்பம், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளனர், இது அவரை வரும் ஆண்டுகளில் பெரிய சாதனைகளைச் செய்ய முன்னோக்கி தள்ளும். வாழ்த்துக்கள்.” என்று கூறினார்.

மேலும் மாநிலங்களவை எம்.பியாக இசைஞானி இளையராஜா பதவியடைந்தது குறித்து பாரதிராஜா பேசும்போது, “என் நண்பன் இளையராஜா.. நானும் அவனும் அரைடவுசர் காலத்தில் இருந்து 50 ஆண்டுகாலம் பயணிக்கிறோம். 5 விரலில் சரஸ்வதி இருக்கிறாள் என்றால், உடம்பு பூராவும் சரஸ்வதி அவனுக்கு.. அவன் தமிழ்நாட்டுக்கு கெடைச்ச சொத்து.. அவன் பாராளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு எம்.பி ஆகியிருக்கிறான். வாழ்த்துக்கள். சினிமா கலைஞர்கள் எவ்வளவு கௌரவிக்கப்படுகிறார்கள்? ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் அம்பானி, டாடா பிர்லாவை விட சினிமா காரனாக தான் பிறக்க வேண்டும் என நான் சொல்வேன். இந்த பாக்கியம், இந்த வாழ்க்கை, சினிமாவின் சுகம், சினிமாவின் டிராவல் எந்த தொழில் செய்பவருக்கும் கிடைக்காது. மிகவும் அற்புதமான உலகம் சினிமா உலகம்!” என்று குறிப்பிட்டார்.

Also Read | பொன்னியின் செல்வன் படத்தின் டீசர்.. விக்ரமின் அதிரடி வசனம்.. ஜெயம் ரவி & கார்த்தியின் MASS LOOK!

தொடர்புடைய இணைப்புகள்

Bharathirajaa wishes ilaiyaraaja MP post The Warrior

People looking for online information on Bharathirajaa, Ilaiyaraaja MP, Ram Pothineni, The Warrior will find this news story useful.