இந்திய அளவில் பிரபலமான தமிழ் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு இன்று 78வது பிறந்த நாள் என்பதை அடுத்து ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

இசைஞானி என்றும் மேஸ்ட்ரோ என்றும் அழைக்கப்படும் இளையராஜாவின் பாடல்கள் என்றாலே பட்டிதொட்டி எங்கும் ரசிக்காத இசை ரசிகர்களே கிடையாது. ஜூன் 2-ஆம் தேதியான இன்றைய தினம் அவருக்கு பிறந்த நாள் என்பதால் பல இடங்களிலும் வானொலிகளிலும் டிவிகளிலும் இளையராஜாவின் பாடல்கள் ஒளிபரப்பாகி வருகின்றனர்.
அன்னக்கிளியில் தொடங்கிய இளையராஜாவின் பயணம் பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்தில் அடுத்த கட்டத்துக்கு சென்றது என சொல்லலாம். அத்தனையும் நாட்டுப்புற, கிராமிய, மெலோடி பாடல்கள் என
வெரைட்டியான அந்த ஆல்பம் சூப்பர் ஹிட் ஆனது. அந்த படம் தான் இயக்குநர் பாரதிராஜாவுக்கு முதல் படம்.
அதன் பின்னர் பாரதிராஜா - இளையராஜாவின் இணைபிரியா நட்பு ‘கிழக்கே போகும் ரயில்’, ‘நிழல்கள்’, ‘சிகப்பு ரோஜக்கள்’ உள்ளிட்ட பாரதிராஜாவின் பல்வேறு திரைப்படங்களுக்கு இளையராஜா இசையமைத்ததன் மூலம் வெற்றிப் பயணமாக தொடர்ந்தது.
இந்நிலையில் தற்போது இயக்குநர் பாரதிராஜா இளையராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது பற்றி தமது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் பதிவிட்டுள்ள பாரதிராஜா, இளையராஜாவுடனான புகைப்படத்தை பதிவிட்டு, “உனக்கும், உன் இசைக்கும், நம் உறவுக்கும், என்றும் வயதில்லை வாழ்த்துக்கள்டா. #Ilaiyaraaja - உயிர்த் தோழன் பாரதிராஜா.” என பதிவிட்டுள்ளார்.
ALSO READ: பேத்தியுடன் KeyBoard .. யுவனின் வைரல் வாழ்த்து! #இளையராஜா பர்த்டே ஸ்பெஷல்!