தமிழ் சினிமாவின் முக்கியமானவரும் மூத்த இயக்குநருமான பாரதிராஜா முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், சத்யராஜ் ஆகியோரை இயக்கியவர்.
Also Read | BB Jodigal 2: கப்னு புடிச்சுகிட்ட ரன்பீர்.. அதுவும் வெரைட்டி ஸ்லாங்ல பேசுறார்யா.. செம க்யூட் வீடியோ..
சமீப காலங்களில் தொடர்ச்சியாக திரைப்படங்கள் நடித்து வரும் பாரதிராஜா,பாண்டிய நாடு, குரங்கு பொம்மை, ஈஸ்வரன், ராக்கி, கென்னடி கிளப் என பல இளம் தலைமுறையினரின் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது தனுஷ் நடிப்பில் திரையரங்கில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ்க்கு தாத்தாவாக, அதாவது 'சீனியர் திருச்சிற்றம்பலம்' எனும் செம அட்ராசிட்டி கலந்த ஜாலியான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
முன்னதாக கடந்த ஆகஸ்டு 23ஆம் தேதி தனது 80வது பிறந்தநாளை கொண்டாடிய பாரதிராஜா, திடீரென உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் டாக்டர் நடேசன், பாரதிராஜாவின் மனைவி, மகன், மகள், தம்பி, கவிஞர் வைரமுத்து ஆகியோரின் ஆலோசனையின் பேரிலும் எம்.ஜி.எம் மருத்துவமனையில், இதன் தலைவர் மற்றும் டாக்டர் ராஜகோபால் மேற்பார்வையில், மேல் சிகிச்சைக்காக சில நாட்களுக்கு முன் பாரதிராஜா அனுமதிக்கப்பட்டார். இதற்கான ஏற்பாடுகளையும் பாரதிராஜாவின் நெருங்கிய நண்பர் ஏ.சி .சண்முகம் செய்து வைத்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பியுள்ளார். தொடக்கத்தில் நுரையீரலில் கொஞ்சம் பிரச்சனை இருந்ததை தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அந்த பாக்டீரியா கிருமியினால் நிமோனியா தொற்று ஏற்பட்டிருந்ததாகவும், அதற்கான சிகிச்சை வழங்கியதால், விரைவில் குணமாகிவிட்டதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. நுரையீரல் மருத்துவர் குழு, உடற்கூறு மருத்துவர் குழு, தீவிர சிகிச்சை மருத்துவர், இயன்முறை மருத்துவ குழு ஆகிய மருத்துவ குழுக்களால் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில்தான் மீண்டும் திரைப்பயணத்துக்கு தயாராகும் பாரதிராஜா, இயக்குநர் தங்கர் பச்சானின் இயகத்திலான தமது அடுத்த படத்தின் படப்பிடிப்பு பணிகளுக்கு உற்சாகமாக தயாராகி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
Also Read | BB Jodigal 2: ரன்பீருக்கு சென்னைத் தமிழ் சொல்லிக்கொடுத்த வீடியோ சர்ச்சை - மன்னிப்பு கேட்ட ராஜூ.!