ரஜினியின் அரசியல் முடிவு குறித்து பிரபல இயக்குநர் - ''ஓர் தமிழனை அரசனாக ஆட்சி அதிகாரத்தில்....''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தார். அதில், ''ஆட்சி பொறுப்பு வேற கட்சி பொறுப்பு வேற. நல்ல தலைவரை தேர்ந்தெடுக்க நான் ஒரு பாலமாக இருப்பேன். வாக்குகளை பிரிக்க நான் வரவில்லை. மக்கள் ஒரு மாற்றத்தை கொண்டுவர தயாராக வேண்டும்'' என்று பேசினார்.

ரஜினிகாந்த்தின் லேட்டஸ்ட் அரசியல் முடிவு குறித்து பாரதிராஜா கருத்து | Bharathiraja comments about Rajinikanth's latest statement

அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக பிரபல இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், ''எனது நாற்பது ஆண்டு கால நட்பில், இன்று இந்த சமூகம் உயர்ந்த உள்ளம், உயர்ந்த மனிதன், உயர்ந்த கலைஞன், சூப்பர் ஸ்டார் என கொண்டாடும் 'ரஜினி' என்ற மந்திரத்தை விட,'ரஜினி' என்ற மனிதம் எப்படி வெளிப்படும் என்று நான் முன்பே அறிந்திருக்கிறேன்

தமிழன் தான் ஆட்சிக்கு தலைசிறந்தவன் என்ற ரஜினியின் நாற்காலி கொள்கை, தமிழனின் வரலாறு, ஆகியவற்றின் மூலம் பேராசை என்ற சமூக விலங்கை உடைப்பதும் ரஜினி என்ற ஓர் உண்மைக்கே சாரும்.

ஆருயிர் நண்பன் என்பதை விட, சிறந்த மனிதனாக, ரஜினியின் 'நாணய அரசியலில்' அதன் முதல் பக்கத்திலேயே ஓர் தமிழனை 'அரசனாக' ஆட்சி அதிகாரத்தில் அமர்த்துவேன் என்ற  ஓர் மனிதத்தை, கொள்கைகளாக பார்க்காமல்  அதை ரஜினியாக, ஓர் அற்புத மனிதனாகவே நான் பார்க்கிறேன்'' என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

ரஜினிகாந்த்தின் லேட்டஸ்ட் அரசியல் முடிவு குறித்து பாரதிராஜா கருத்து | Bharathiraja comments about Rajinikanth's latest statement

People looking for online information on Bharathiraja, Politics, Rajinikanth will find this news story useful.