உயர் சிகிச்சைக்காக வேறொரு மருத்துவமனைக்கு செல்லும் இயக்குநர் பாரதிராஜா.?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, தமிழ் சினிமாவின் மண் மனம் மாறாத திரைக்காவியங்களை இயக்கியவர்.

Advertising
>
Advertising

Also Read | BB Jodigal 2: "பாவனி இப்போ லேடி அமீரா..?".. பிரம்மிக்க வைத்த புதிய ஃப்ரோமோ..

நடிகர்கள் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் என முன்னணி நடிகர்கள் பலரையும் இயக்கி இருக்கிறார் இயக்குனர் பாரதிராஜா.

அண்மை காலங்களில், தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து வரும் பாரதிராஜா, இளைய தலைமுறை இயக்குனர் மற்றும் நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். அந்த வகையில், 'குரங்கு பொம்மை', 'ஈஸ்வரன்', 'ராக்கி', 'குற்றமே தண்டனை', 'கென்னடி கிளப்', 'ஈஸ்வரன்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த பாரதிராஜா, தற்போது தனுஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் 'திருச்சிற்றம்பலம்' திரைப்படத்தில் தனுஷ்க்கு தாத்தாவாக பட்டையை கிளப்பியிருக்கிறார்.

கடந்த ஆகஸ்டு 23ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய பாரதிராஜாவுக்கு 80 வயது நிறைவடைந்தது. இநநிலையில், அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து, நமது தரப்பில் இருந்து விசாரித்த போது, நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை தி. நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாரதிராஜா ஓரிரு நாட்களில் வீடு திரும்பவார் என்றும் கூறப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, தற்போது கிடைத்துள்ள தகவல்களின் படி, டாக்டர் நடேசன், பாரதிராஜாவின் மனைவி, மகன், மகள், தம்பி, கவிஞர் வைரமுத்து ஆகியோரின் ஆலோசனையின் பேரிலும் எம்.ஜி.எம் மருத்துவமனையில், இதன் தலைவர் மற்றும் டாக்டர் ராஜகோபால் மேற்பார்வையில், மேல் சிகிச்சைக்காக இன்று மதியம் பாரதிராஜா அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதற்கான ஏற்பாடுகளையும் பாரதிராஜாவின் நெருங்கிய நண்பர் ஏ.சி .சண்முகம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.

முன்னதாக பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை ராதிகா, பிரான்சில் உள்ள தேவாலயத்தில் பாரதிராஜா நலம் பெற வேண்டி மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து பிரார்த்தனை செய்துள்ளார். இதே போல, ரசிகர்களும் பல திரைப்படம் மற்றும் அரசியல் பிரபலங்களும் பாரதிராஜா பூரணநலம் பெற வேண்டும் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

Also Read | “வாழ்க்கையிலயே மறக்க முடியாது!” - மறைந்த முதல்வர் ஜெயலலிதா பற்றி யாத்ரா தனுஷ் Throwback

தொடர்புடைய இணைப்புகள்

Bharathiraja changed to another hospital for treatment

People looking for online information on Bharathiraja, Bharathiraja Health will find this news story useful.