ஆஸ்கர் நாயகனும், ஆர்.பார்த்திபனும் - இரவின் நிழல் இசை விழா .. பாரதிராஜா வேண்டுகோள்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஒரே ஷாட்டில் உருவாக்கப்படும் வித்தியாசமான படைப்பாக இயக்குனர் நடிகர் பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படம் உருவாகியுள்ளது.

Advertising
>
Advertising

ஹைதராபாத்தில் அஜித்... "ரசிகரோடா இவ்ளோ இயல்பா இருக்காரே?" .. நெகிழும் ரசிகர்கள்..

இயக்குனர் பார்த்திபனின் வித்தியாச முயற்சி…

தொடர்ந்து வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு வரும் இயக்குனர் நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான ஒத்த செருப்பு திரைப்படம் பரவலாகக் கவனத்தைப் பெற்றது. அந்த படம் முழுவதும் அவர் மட்டுமே நடித்திருந்தார். இதையடுத்து இப்போது அவர் இயகத்தில் ஒரே ஷாட்டில் உருவாகும் படமாக இரவின் நிழல் என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படம் குறித்த அறிவிப்பு வந்ததில் இருந்து ரசிகர்கள் இந்த படத்தைக் காண ஆவலாக உள்ளனர்.

பாரதிராஜாவின் அழைப்பு…

இந்நிலையில் மே மாதம் 1-ஆம் தேதி அன்று நடைபெறவிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள ஆர்.பார்த்திபனின் இரவின் நிழல்  திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை முன்னிட்டு திரையுலகினருக்கு இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


 
இது தொடர்பாக இயக்குநரும், நடிகரும் தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்க தலைவருமான பாரதிராஜா, தமது புதிய அறிக்கையில், “படைப்புகளால் மக்களுக்கு இன்பச் சாமரம் வீசும் கலைஞர்கள் இங்கு இருப்பது தமிழ் சினிமாவின் வரம்.  அதிலும், தமிழ் சினிமாவை சிரசிலேந்தி பாரெங்கும் பரப்பும் திறன் மிகு நாயகர்கள் வாய்த்திருப்பது வரத்திலும் வரம்.  அப்படியான வரத்திலும் வரமான ஆஸ்கர் நாயகன் ஏ. ஆர். ரஹ்மானும்,  ஆர். பார்த்திபனும் அழகிய படைப்பு ஒன்றை உருவாக்கி நம் முன் விருந்து படைக்கின்றனர்.

இரவின் நிழல் என்ற அப்படத்தை என்னைக் காணச் செய்த பார்த்திபனுக்கு எனது நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். மனதை கொள்ளை கொள்ளும் நிழலைக் கண்டேன். மனம் நிறைந்தேன்.  அப்படைப்பின் இசை நாயகனின் பயணத்தைக் கொண்டாடும் விதமாக மே 1ஆம் தேதி விழா தீவுத்திடலில் நடக்கிறது.  என் சார்பாக திரைத்துறையினர் அனைவரையும்  அழைக்கிறேன். வாருங்கள். நீங்கள் கலந்துகொள்வதே இக்கலைஞர்களைக் கவுரவிப்பதற்கும் பெருமைப்படுத்துவதற்கும் சமம்.  வந்து கலந்து இக் கலைஞர்களின் பணியை பெருமிதம் கொள்ளச் செய்வோம். 

மே 1 திரைத்துறையினர் அனைவரும் கலந்துகொண்டு திருவிழாவாக அவ்விழா அமையச் செய்ய மூத்த கலைஞன் என்ற முறையிலும், தமிழ் ஃபிலிம் ஆக்டிவ் புரொடியூசர்ஸ் அசோசியேசன் சார்பிலும் கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

கடுமையான உடற்பயிற்சியோடு ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! முழு தகவல்

தொடர்புடைய இணைப்புகள்

Bharathiraaja invites R Parthiban AR Rahman iravin nizhal music launch

People looking for online information on AR Rahman, Bharathiraja, Iravin nizhal music launch, R parthiban will find this news story useful.