விஜய் டிவியில் மிக பிரபலமாக ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா.
இத்தொடரில் பாரதி டாக்டராக பணிப்புரியும் மருத்துவமனையில் கண்ணம்மா மருத்துவமனையின் அட்மின்னாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அந்த மருத்துவமனையில் அமைச்சர் ஒருவர் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் அட்மிட் ஆகியிருந்த போது, அங்கு வந்த தீவிரவாதிகள் மருத்துவமனையில் இருந்த கண்ணம்மா, கண்ணமாவின் குழந்தைகள், அகிலன், அகிலனின் மனைவி உட்பட ஊழியர்கள், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் சிலரை பிணை கைதிகளாக பிடித்து வைத்து கொண்டனர்.
சிறையில் உள்ள ஒரு தீவிரவாதியை ரிலீஸ் செய்ய வேண்டும் என மருத்துவமனையில் உள்ள தீவிரவாதிகள் தங்களது டிமாண்டை முன்வைத்தனர். இதற்கிடையில் அமைச்சருக்கு உடல்நிலை மோசமாக, அவரது உயிரை காப்பாற்ற, தீவிரவாதிகள் டாக்டர் பாரதியை மருத்துவமனைக்குள் வரவைத்து அமைச்சரின் உயிரை காப்பாற்ற வேண்டும். இல்லையெனில் உன் குழந்தையை கொன்றுவிடுவேன் என மிரட்ட, பாரதியோ அரும்பாடுப்பட்டு அமைச்சரின் உயிரை காப்பாற்றுகிறார்.
இதனிடையே மருத்துவமனையில் உள்ளவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதால், அதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் தீவிரவாதிகளில் ஒருவர், அங்குள்ள பெண்களிடம் அத்துமீறி செயல்பட்டு வருகிறார். அப்படி ஒரு சூழ்நிலையில், கண்ணம்மாவையும் அந்த தீவிரவாதி தனியாக அழைத்து செல்கிறார். அவரிடம் தவறாக நடக்க முயலும் சமயத்தில் பொங்கி எழும் கண்ணம்மா, அங்கிருக்கும் கத்திரிக்கோலால் அந்த தீவிரவாதியை சரமாரியாக குத்தவே அவனும் சரிந்து விழுகிறான்.
அதன்பின்னர் பாரதியும், பாரதியின் தம்பியும் சேர்ந்து சில தீவிரவாதிகளை அடித்துபோடுவது போன்ற ப்ரோமோ வெளியானது. இந்நிலையில், பாரதி கண்ணம்மா சீரியல் டீம், தீவிரவாதிகளாக நடித்த நடிகர்களுடன் கேக் வெட்டிய வீடியோவை, அந்த தீவிரவாதிகளில் ஒருவராக நடித்த பிரபல நடிகரான ‘மெட்ராஸ்’ லிங்கேஷ் தமது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “அனுபவம் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒரு விதம் .. இறுக்கமான சூழலுக்கு இடையில் ஒரு இளைப்பாறுதல்.. விஜய் தொலைக்காட்சி பாரதி கண்ணம்மா.. விடை பெறுகிறேன்” என பகிர்ந்துள்ளார். இதில் இந்த சீரியலின் இயக்குநர் பிரவீன் பென்னட் உட்பட ஏனைய நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர்.