விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில், பாரதி மற்றும் கண்ணம்மா இருவருக்குமான குழந்தைகளான ஹேமா பாரதியிடம் தத்துப் பிள்ளையாகவும், லஷ்மி கண்ணம்மாவிடம் கண்ணம்மா மகளாகவும் வளர, கண்ணம்மாவுக்கு தனக்கு இன்னொரு குழந்தை பிறந்த விஷயம் டாக்டர் மூலம் தெரிந்துவிட்டது. இதனால் கண்ணம்மாவின் மாமியார் சௌந்தர்யா கண்ணம்மாவுக்கு பதில் சொல்லாமல் தவிர்த்து வருகிறார்.

இதனிடையே குழந்தை ஹேமா கண்ணம்மா வீட்டிலும், குழந்தை லஷ்மி பாரதியின் வீட்டிலும் ஒரு வாரம் இருந்துள்ளனர். காரணம், பாரதிக்கு, கண்ணம்மாவின் குழந்தைதான் லஷ்மி என ஸ்கூல் நோட்புக் மூலம் தெரிந்துவிட்டதை அடுத்து, லஷ்மியை தன் வீட்டிலேயே வைத்திருக்க, கண்ணம்மாவோ ஒரு வாரம் கழித்து ஹேமாவை அழைத்துவந்து பாரதியின் வீட்டில் விட்டுவிட்டு, தன் குழந்தைதான் லஷ்மி என உண்மையை போட்டு உடைத்துவிட, அதற்கு பாரதி கவுண்ட்டர் வசனங்களை பேசத் தொடங்கிவிட்டார்.
குறிப்பாக லஷ்மியை பாரதி தன் செலவில் படிக்க வைப்பதால் கண்ணம்மா பொய் சொல்லி டிராமா பண்ணியதாக கண்ணம்மாவை பாரதி விமர்சித்ததுடன், “உன் மகளையே உன்னை சமையல் அம்மா என அழைக்கும்படியாய் தயார் செய்திருக்கிறாயே?.. உலகத்துலயே சமையல் அம்மா என்கிற வார்த்தையே உனக்காக தான் உருவாக்கியிருக்காங்க போல!!” என இஷ்டத்துக்கும் கலாய்த்துவிட்டார்.
ஆனால் இதற்கெல்லாம் டென்ஷன் ஆகாத கண்ணம்மா, “நீ என் குழந்தையை கஷ்டப்படுத்திடக் கூடாதுங்குறதுக்காக தான் அப்படி பொய் சொன்னேன்.. அதுக்கு என்ன?” என சொன்ன பொய்யை கோபமாக ஒப்புக்கொண்டு லஷ்மியை அழைத்துக்கொண்டு பாரதியை பார்த்து ஒரு முறை முறைத்துவிட்டு சென்றுவிட்டார்.