ஷாக் ஆன பாரதி!! திடீரென தெரிந்துபோன நீண்டகால உண்மை!.. பாரதி கண்ணம்மா பரபரப்பு PROMO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டு வரும் சீரியல் பாரதி கண்ணம்மா.

இந்த சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணம் செய்துகொண்ட பிறகு பாரதி, கண்ணம்மாவின் மீது சந்தேகப்பட்டு அவரை பிரிந்து விட்டான். இதனையடுத்து கண்ணம்மா சுயமரியாதையுடனும், சுயமாகவும் தன் குழந்தையை வளர்க்க போவதாக சொல்லி, தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

Also Read: பிரபல தமிழ் சீரியலில் சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்து அசத்திய திரைப்பட நடிகை!!... வைரல் ஆகும் ப்ரோமோ Video!

இதனிடையே கண்ணம்மாவுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர். அதில் ஒரு குழந்தை கண்ணம்மாவிடம் சௌந்தர்ய லக்‌ஷ்மி என்கிற பெயரிலும், இன்னொரு குழந்தை ஹேமா என்கிற பெயரில் பாரதியிடம் வளர்கின்றனர். ஆனால் இருவரும் தங்கள் குழந்தைதான் என்கிற உண்மை, இந்த இருவருக்குமே இதுவரை தெரியாமல் இருந்து வந்தது.

இதனிடையே அண்மையில்தான் ஹேமா, பாரதியிடம் வளரும் குழந்தை என்று கண்ணம்மாவுக்கு தெரிய வந்தது. அதேசமயம் ஹேமா தன்னுடைய குழந்தை என்பது கண்ணம்மாவுக்கு தெரியாது. கண்ணம்மாவை பொறுத்தவரை ஹேமா, பாரதிக்கும் வெண்பாவுக்கும் பிறந்த குழந்தை என நம்புகிறாள். இதேபோல் பாரதிக்கு லக்‌ஷ்மி குழந்தையை ஒரு ஆளாக தான் தெரியும்.  லக்‌ஷ்மி, கண்ணம்மாவின் குழந்தை என்பது பாரதிக்கு தெரியாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் அதுவும் தற்போது உடைந்துவிட்டது.

ஆம், லஷ்மிக்கு ஏதோ வயிறு வலி என்று வர, அவளிடம் நட்பாக பழகி வரும் அவளது உண்மையான அப்பாவான பாரதி, லக்‌ஷ்மியை மருத்துவமனை அழைத்துச் சென்று வைத்தியம் பார்க்கிறான். இதனிடையே லக்‌ஷ்மியின் பெற்றோர் யார் என தெரிந்துகொள்ளும் முனைப்பில், பாரதி, அவளது ஸ்கூல் பையை திறந்து, க்ளாஸ் நோட்டை எடுத்து பார்க்கிறான். 

அப்போது தான் லக்‌ஷ்மியின் அம்மா கண்ணம்மா என்பதை அந்த நோட்டில் ஒட்டப்பட்டிருந்த கண்ணம்மாவின் ஃபோட்டோவையும், அதில் எழுதப்பட்டிருந்த கண்ணம்மாவின் பெயரையும் பார்த்து அறிந்து பாரதி அதிர்ச்சி அடைகிறான். இந்த எபிசோடுதான் ஆகஸ்டு 13-ஆம் தேதி ஒளிபரப்பாகியுள்ளது.

ஷாக் ஆன பாரதி!! திடீரென தெரிந்துபோன நீண்டகால உண்மை!.. பாரதி கண்ணம்மா பரபரப்பு PROMO! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Bharathi Kannamma Serial Today episode 2021 aug 13 promo

People looking for online information on Akilan, AkilanAnjlai, Anjali, Bharathi, Bharathi Kannamma, Bharathi Kannamma Serial, Bharathi Kannamma Serial today episode, BharathiKannamma, Hema, Kannamma, Lakshmi, Venba will find this news story useful.