பாரதி கண்ணம்மா சீரியலின் இந்த வார ப்ரோமோ வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

Also Read | சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள்.. ஒரே வரியில் வாழ்த்தி அசத்திய நடிகர் தனுஷ்..
ஸ்டார் விஜய் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா, தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
பாரதி மற்றும் கண்ணம்மா ஆகியோர் பிரிந்து வாழ தொடங்கி, அவர்களின் குழந்தைகள் தனித்தனியாக வாழ, பின்னர் அவர்கள் குறித்த உண்மையும் தெரிய வர இப்படி பாரதி கண்ணம்மாவில் வரும் ஒவ்வொரு நகர்வும் விறுவிறுப்பை கூட்ட தான் செய்தது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலின் சமீபத்திய எபிசோடில், பாரதி வெண்பாவை திருமணம் முற்பட்டதால் பாரதியின் குடும்பம் மற்றும் பாரதியிடம் வளர்ந்து வந்த குழந்தை ஹேமா அனைவருமே பாரதியை வெறுத்தனர். மேலும் வெண்பாவுக்கு ரோகித்துடன் திருமணம் நடந்து விட்டது.
ஹேமா & லெட்சுமி இருவரும் பாரதியின் குழந்தைகள் என ரிசல்ட் வந்து விட்டது. பாரதியின் சந்தேகங்கள் தீர்ந்துவிட்டது. இந்நிலையில் குழந்தை ஹேமா, லெட்சுமி இருவரையும் அழைத்து கண்ணம்மா கண் காணாத இடத்திற்கு பேருந்தில் பயணம் செய்கிறார்.
கண்ணம்மா & குழந்தைகளை அழைத்து வர குடும்பத்துடன் பாரதி, கண்ணம்மா வீட்டிற்கு செல்கிறார். வீட்டில் கண்ணம்மா & குழந்தைகள் இல்லாமல் போவதை கண்டு கதறி அழும் பாரதி, கண்ணம்மாவை "எங்கே போய் தேடுவேன்" என தலையில் அடித்து கொள்கிறார்.
இனி கண்ணம்மா & குழந்தைகளை பாரதி தேடி கண்டு பிடிக்கும் படலம் பாரதி கண்ணம்மாவில் துவங்க உள்ளது.
Also Read | சூடு பிடிக்கும் தேர்தல்.. ஜெயிக்கப்போவது ராதிகாவா? பாக்யாவா? பரபரப்பான பாக்கியலட்சுமி தொடர்!