BHARATHI KANNAMMA: அதிர்ச்சி!… “பாரதி கண்ணம்மா” சீரியல் நடிகர் பரத் கல்யாண் மனைவி திடீர் மரணம்..!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுள் ஒன்று பாரதி கண்ணம்மா. கணவன் - மனைவி குறித்த இந்த டிராமா கதையில், பாரதி மற்றும் கண்ணம்மா இருவருமே மருத்துவமனையில் பணிபுரிந்து வருகின்றனர். இதில் நாயகன் பாரதி டாக்டராக மருத்துவமனையில் பணிபுரிந்துவருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | "எல்லாம் ரிலாக்ஸ் ஆனதும் ஆயிஷாக்கு மூச்சுத்திணறல் வருது! எப்படி?" - ஜனனி, ராபர்ட் பேசியது என்ன?

அந்த மருத்துவமனையின் நிறுவனராக நடித்து வருகிறார் நடிகர் பரத் கல்யாண். நடிகர் பரத் கல்யாண் , அதற்கு முன்பே 90களில் இருந்தே சின்னத்திரை ரசிகர்களுக்கு அதிகம் பரிச்சயமானவர் தான், 90-களில் வெளியான சொந்தம் சீரியல் தொடங்கி, கடந்த 2010 ல் வெளியான வம்சம் சீரியல் வரை தொடர்ந்து பல வருடங்களாக சீரியல்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தவர் பரத் கல்யாண்.

தமிழில் சிருங்காரம் என்னும் படத்தில் (2007) ஆம் ஆண்டு அறிமுகமான இவர், பிறகு கன்னடத் திரையுலகில் யக்கா, பயணம், கோடிகோப்பா 2, மற்றும் பகவத் ஸ்ரீ ராமானுஜா போன்ற படங்களில் நடித்தார். ஜீ தமிழின் ராஜா மகள் சீரியலில் நடித்து வந்த இவர், அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் எண்ட்ரி கொடுத்தார். இந்த சீரியல் மட்டுமின்றி, 'கனா காணும் காலங்கள்', 'கண்ணான கண்ணே' , 'ஜமீலாவின் அப்பா' போன்ற சீரியல்களிலும் நடிக்கிறார்.

இந்நிலையில்தான் இவரது மனைவி பிரியதர்ஷினி திடீரென உடல்நலக்குறைவால் மரணம் அடைந்துள்ள தகவல் சின்னத்திரை உலகினரிடையே கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பரத் கல்யாணின் மனைவி மரணம் அடைந்தத அடுத்து இந்த துக்கத்தை அனுசரிக்கும் வகையில் நடிகர் பரத் கல்யாணின் நண்பர்களும், சின்னத்திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Also Read | Bigg boss 6 tamil : ராபர்ட் சாப்பிடாம நான் சாப்பிட மாட்டேன்.. அடம் பிடிச்ச ரச்சிதா .. தூதுபோன ஷெரினா..! 🤗

தொடர்புடைய இணைப்புகள்

Bharathi Kannamma Serial actor Bharath Kalyan wife is dead

People looking for online information on Barath Kalyan, Bharath Kalyan, Bharathi kannama actor, Bharathi Kannamma, Bharathi kannamma serial actor will find this news story useful.