விஜய் டிவியில் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் பாரதி கண்ணம்மா.

பிரவீன் பென்னட் இயக்கத்தில் பாரதியாக அருண்பிரசாத், கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்ரியன் நடித்து வரும் இந்த சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர்.
இந்த சீரியலில் பாரதி கண்ணம்மா தம்பதியரின் குழந்தைகளான, லக்ஷ்மி கண்ணம்மாவிடமும்; ஹேமா பாரதியிடமும் வளர்ந்து வருகிறார்கள். கண்ணம்மா மற்றும் பாரதி இருவருக்குமே, குழந்தை ஹேமா, பாரதிக்கும் தனக்கும் பிறந்த குழந்தை என்று தெரியாது. கண்ணம்மாவோ, அந்த குழந்தை பாரதிக்கும் வெண்பாவுக்கு பிறந்த குழந்தை என நம்பிக் கொண்டிருக்கிறார்.
உண்மையில் பாரதிக்கும் வெண்பாவுக்கு திருமணம் ஆகவில்லை எனபது கண்ணம்மாவுக்கு தெரியாது. ஆனால் ஹேமாவுக்கு கண்ணம்மாவை, சமையல் அம்மாவாக தெரியும். அந்த வகையில் ஹேமாவுக்கு கண்ணம்மா மீது இருக்கும் பிரியம், பாரதிக்கு தெரியவந்ததும் பாரதிக்கு கோபம் வந்துவிட்டது.
இதனிடையே வெண்பா, ஹேமாவை கடத்தி வைத்துவிட, இதற்கும் கண்ணம்மாவின் மீது சந்தேகப்பட்டு புகார் கொடுத்திருந்தான் பாரதி. ஆனால் கண்ணம்மாவை அவருடைய மாமியாரும், பாரதியின் தாயாருமான சவுந்தர்யா சென்று பெயிலில் எடுத்துவிட்டார்.
இதன்பிறகு, குழந்தை ஹேமாவை ஆளாளுக்கு ஒரு புறம் தேடி வந்த நிலையில், கண்ணம்மா ஹேமாவை கடத்தல் காரர்களிடமிருந்து ஒரு பொதுவெளியில் கண்டுபிடித்து மீட்டு விட்டார். இந்த தகவலை மருத்துவமனையில் இருந்து சவுந்தர்யா போன் பண்ணி பாரதிக்கு சொன்னதும், பாரதி அந்தத் தகவலை கேட்டுவிட்டு, தனது அருகில் இருக்கும் வெண்பாவிடம் கூறுகிறான்.
ஆனால், அதை கேட்டதும், வெண்பா, தான் ஒரு வில்லி என்பதை மறைக்காமல், உணர்ச்சி வசப்பட்டு, “என்னது? ஹேமா கிடைச்சுட்டாளா?” என்று பதட்டமாகவும் அதிர்ச்சியாகவும் கேட்க, பாரதியோ, “இதற்கு நீ சந்தோசப்பட தானே வேண்டும்? இப்ப எதுக்கு நீ ஷாக் ஆகுற?” என்று கேட்கிறார்.
இந்த ப்ரோமோவை பார்த்த பலரும், “மண்டை மேல் இருக்கும் கொண்டையை மறந்து விட்டாயே வெண்பா!” என்று கலாய்த்து வருகின்றனர்.