"ஹேமாவை மீட்கும் கண்ணம்மா"!.. ரவுடிகளுடன் மோதும் 'சிங்கப்பெண்கள்'! தெறிக்கும் ARR குரல்!.. மாஸ் PROMO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் பாரதி கண்ணம்மா.

இதில் பாரதியிடம் வளரும் ஹேமாவை வெண்பா கடத்தி வைக்க, கண்ணம்மாவின் மீது சந்தேகப்பட்டு பாரதி புகார் அளிக்க, ஆனாலும் கண்ணம்மாவை அவரது மாமியார் சௌந்தர்யா பெயிலில் எடுத்துள்ளார்.

இதனிடையே கண்ணம்மா ஒருபுறமும் பாரதி ஒருபுறமும் ஹேமாவை தேட, ஹேமாவோ ரவுடிகளிடம் இருந்து தப்பி ஓடிவருகிறார். அவரை தேடி ரவுடிகள் ஒருபுறம் அலைந்து ஹேமாவை மீண்டும் கடத்த முயலுகின்றனர். அப்போது தன் அப்பாவுடன் சென்று ஹேமாவை கடத்தும் ரவுடிகளை பொதுவெளியில் பார்த்துவிடும் கண்ணம்மா அவர்களிடம் இருந்து மீட்க முயலுகிறார்.

அவ்வாறு ரவுடிகளிடம் இருந்து கண்ணம்மா ஹேமாவை மீட்கும்போது ரவுடிகள் கண்ணம்மாவை தாக்குகின்றனர். ஆனால் அப்போது அது பொதுவெளி என்பதால், அருகில் இருந்து மகளிர் விடுதி பெண்கள் ஓடிவந்து ரவுடிகளுடன் மோதி புரட்டி எடுக்கின்றனர்.

அப்போது விஜய் நடித்த பிகில் திரைப்படத்துக்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து பாடிய சிங்கப்பெண்ணே பாடல் பின்னணியில் ஒலிக்கிறது. மிகவும் மாஸாக வெளியாகிவுள்ள இந்த ப்ரோமோ வைரலாகி வருகிறது. இறுதியாக கண்ணம்மா ஹேமாவை காப்பாற்றுகிறாரா? என இந்த ப்ரோமோ முடிகிறது. இந்த எபிசோடுகள் நாளை முதல் அடுத்தடுத்த நாட்களில் ஒளிபரப்பாகவுள்ளன.

ALSO READ: இப்பதான் கொஞ்சம் நல்லாச்சு.. அதுக்குள்ள! பாரதி கண்ணம்மாவில் அகிலன் அஞ்சலிக்கு புது பிரச்சனை?

தொடர்புடைய இணைப்புகள்

Bharathi kannamma promo kannamma saves hema viral promo

People looking for online information on Bharathi kannamma promo, Bharathi kannamma today episode, Bharathi kannamma today promo, BharathiKannamma, Vijay Television will find this news story useful.