விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில், பாரதிக்கு நீதி காத்த அம்மன் கொடுத்த ரிசல்ட்டால் குழம்பிப் போயுள்ளார்.
பாரதி கண்ணம்மா விவாகரத்து வழக்கு
முன்னதாக இந்த சீரியலில் பாரதியை ஒரு தலையாக காதலித்து வந்த வெண்பாவின் சூழ்ச்சியா, சுமார் 9 வருடங்கள் பாரதி மற்றும் கண்ணம்மா பிரிந்து வாழ்ந்தனர். அதன் பின்னர் பாரதி கோர்ட்டில் விவாகரத்துக்கு விண்ணப்பித்ததை அடுத்து, பாரதி மற்றும் கண்ணம்மா இருவரையும் 6 மாதம் சேர்ந்து வாழச் சொல்லி கோர்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.
கோயிலுக்கு போகலாம்
இந்நிலையில் பாரதி, கண்ணம்மா மற்றும் தன் குடும்பத்தை கோயிலுக்கு அழைத்துச் செல்வதாக கடந்த வாரம் கூற, அவர்கள் அனைவரும் இதைச் சொல்வது பாரதியா? நம்பவே முடியவில்லையே.. என பாரதி சொன்னதை நம்பி கிளம்பி, பாரதியுடன் குடும்பத்துடன் கோயிலுக்கு வந்தனர்.
Also Read: தாமரை விசயத்துல இதை அன்றே கணித்த கமல்.. ஃபினாலேவில் அவரே சொன்ன வார்த்தை!
நீதி காத்த அம்மன்
ஆனால் அவர்கள் வந்தது ‘நீதி காத்த அம்மன்’ எனும் அம்மன் அருள் தரும் ஒரு கோயில். இந்த கோயிலின் ஐதீகப்படி, குடும்பத்தில் சண்டை இருப்பவர்கள் யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதை தனித்தனி பொங்கல் வைத்து ஒரு ‘டெஸ்ட்’ பண்ணி பார்ப்பார்கள். யார் பக்கம் நியாயம் இல்லையோ, அவர்கள் பொங்கல் சரிவர பொங்காது என்றும், அந்த குறிப்பிட நபரிடம் தான் நியாயம் இல்லை என்றும் அம்மன் கருதுவதாக பக்தர்கள் புரிந்துகொள்வார்கள் என்றும் இந்த காட்சிகளில் சொல்லப்பட்டிருக்கிறது.
Also Read: மக்கள் மனம் வென்று மகுடம் சூடிய ராஜூ.. ஆஹா.. 4வது சீசன் வின்னர் ஆரியின் அற்புத வாழ்த்து!
பாரதிக்கு பாதகமான அம்மனின் நீதி
அதன்படி பாரதி மற்றும் கண்ணம்மா தனித்தனியே வைத்த பொங்கலில், பாரதி தோல்வி அடைய, கண்ணம்மாவும் பாரதியின் மொத்த குடும்பமும் ஒன்று சேர்ந்து பாரதியை வறுத்தெடுக்கத் தொடங்கிவிட்டனர். “நீயாக கூட்டிட்டு வந்த கோயில் தானே? ஆனால் இந்த அம்மன் கண்ணாம்மாவின் பக்கம் நியாயம் இருப்பதாக நீதி சொல்லிவிட்டது. இப்போது நீ எதை நம்ப போகிறாய்? கண்ணம்மாவுடன் டி.என்.ஏ டெஸ்ட்க்கு வர்றியா?” என மாறி மாறி கேட்டனர்.
அம்மனை நம்புவதா? டாக்டரை நம்புவதா?
இதன் பிறகு இந்த விவகாரத்தை குறித்து தனியே சென்று புலம்பத் தொடங்கிய பாரதி, நீதி காத்த அம்மன் சொல்வதை நம்புவதா? இல்லை 2 முறை எடுத்த டெஸ்ட் ரிசல்டிலும் தனக்கு குழந்தை பாக்கியம் இல்லை என சொன்ன டாக்டர்களின் சொல்லை நம்பவுதா? என அனத்தினார்.
சயின்ஸூம் வேண்டாம், சாமியும் வேண்டாம்
இறுதியில் சயின்ஸூம் வேண்டாம், சாமியும் வேண்டாம் என் மனசாட்சி என்ன சொல்லுதோ. அதன்படி நான் நடந்துகொள்கிறேன். அந்த வகையில் இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என அவரே தனக்குத்தானே பேசி, அவரே ஒரு முடிவு செய்துகொண்டார்.
Also Read: ‘இயேசு 30 வயசுல அற்புதம் நிகழ்த்தினார்’.. தீர்க்கதரிசி ‘ராஜூ’ சொன்னது நியாபகம் இருக்கா?