பாரதி கண்ணம்மா சீரியல் விஜய் டிவியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் டிவியின் சென்சேஷனலான சீரியல்களுள் ஒன்றான இந்த சீரியலில் கண்ணம்மாவாக வினுஷாவும், பாரதியாக அருண் பிரசாத்தும் நடித்து வருகின்றனர். இந்த சீரியலை பிரவீன் பென்னட் இயக்க, பாரதி தம்பி வசனம் எழுதுகிறார்.
Also Read | Behindwoods விருது பெற்ற கையோடு தழுதழுத்த குரலில் ஜெய் பீம் நடிகையின் உருக்கமான கோரிக்கை.. Video
இந்த சீரியலில் ஒரு காலத்தில் கண்ணம்மாவை பாரதி சந்தேகப்பட, அவரிடம் இருந்து பிரிந்த கண்ணம்மா, தற்போது தனியாக வசித்து வருகிறார். இதனிடையே பாரதி கண்ணம்மாவிடம் இருந்து விவாகரத்தும் கேட்டு கோர்ட்டில் விண்ணப்பித்துள்ளார். பாரதியிடம் தத்துப்பிள்ளையாக ஹேமாவும், கண்ணம்மாவிடம் நேரடி குழந்தையாக லக்ஷ்மியும் வளர்ந்து வருகின்றனர். பாரதி தான், தனது அப்பா என தெரிந்தும் அதை காட்டிக்கொள்ளாமல் பழகிவருகிறாள் லக்ஷ்மி.
இதனிடையே பாரதியும் கண்ணம்மாவும் ஒரே மருத்துவமனையில் வேலை செய்யும் சூழ்நிலையும் உண்டாகிவிட்டது. இந்நிலையில் தான் கண்ணம்மாவைத் தேடிவரும் புதிய கேரக்டர், கண்ணம்மாவிடமே, “பாரதியின் மனைவி கண்ணம்மாவை பார்க்க வேண்டும்” என கேட்க, அதற்கு கண்ணம்மா சொல்லும் பதில்களும், அதற்கு அந்த இளைஞர் செய்யும் ட்ரோலும் வைரலாகி வருகிறது.
அதன்படி, அந்த புதிய கேரக்டர், கண்ணம்மா சொன்னதை கேட்டு அந்த இளைஞர், “ஒரே ஹாஸ்பிடல்ல இருப்பீங்க.. ஆனா பிரிய போறீங்க.. தினம் ஒருத்தர ஒருத்தர பாத்துட்டு இருப்பீங்க.. ஆனா பிரிய போறீங்க.. ஏம்மா பாத்துட்டு இருக்குறவன்லாம் முட்டாளா..? இதுக்கு 2 பேரும் டிவோர்ஸ் பண்ணாம பேசாம ஒன்னாவே இருந்துட்டு போயிரலாம்.. ” என சொல்ல, அதற்கு “இதெல்லாம் நான் முடிவு பண்ண முடியாது.. மேல இருக்குறவன் தான் முடிவு பண்ண முடியும் என கண்ணம்மா கூறுகிறார்.
மேலும் பேசும் அந்த இளைஞர், “என்ன ஒரு வித்தியாசமான கதைக்களம்டா சாமி.. பாரதி கண்ணம்மா 9 மணிக்கு நானும் பாத்துருக்கேன்.. ” என்று கலாய்க்க, பதிலுக்கு கண்ணம்மாவோ, “டேய்.. டேய்.. மத்தியானத்துல இருந்து வந்துட்டு ரொம்ப ஓவர பண்ணாத என்ன.?” என கலாய்த்துவிடுகிறார்.
எப்போதும் சீரியஸாக போய்க்கொண்டிருக்கும் இந்த சீரியலில் இந்த ஒரு ப்ரோமோ ட்ரெண்டிங்காக உள்ளதாகவும், சீரியலில் வரும் ஒரு கேரக்டரே அந்த சீரியலை கலாய்த்து தள்ளுவது புதுமையாகவும் ஸ்போர்ட்டிவாகவும் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக அழுகாட்சிகள் இல்லாமல், கண்ணம்மா துணிச்சலாகவும், காமெடியாகவும் இறங்கி அடிப்பதெல்லாம் சீரியலில் வேற ரகம் என்றும், கதைக்கு தேவையான அளவுக்கு காமெடி, செண்டிமெண்ட், விறுவிறுப்பு என அனைத்தும் கலந்தவையாக சீரியல்கள் மாறும்போது திரைப்படம் பார்ப்பவர்களும் சீரியலை பார்ப்பார்கள் என்றும் பலர் கமெண்டுகளில் குறிப்பிட்டு வருகின்றனர்.
Also Read | திமுக-வுக்கு புது சொல்லாடல்.. பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ அடுத்த லிரிக் வீடியோ அப்டேட்.