விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா சீரியலில் இதுவரை கண்ணம்மாவக நடித்து வந்த ரோஷினி ஹரிபிரியன் திடீரென அந்த சீரியலை விட்டு விலகி இருக்கிறார்.

இதனை தொடர்ந்து ரோஷினி ஹரிபிரியன் நடித்து வந்த கதாபாத்திரத்திற்கு மாற்றாக பிரபல மாடலான வினுஷா நடிக்கவிருக்கிறார். இதற்கென பாரதி கண்ணம்மா சீரியலில் இதுவரை நடந்த காட்சிகளில் வினுஷா மீண்டும் நடிக்க வைக்கப் பட்ட ஒரு தொகுப்பான புரோமோ வெளியிடப்பட்டது.
அதில் பாரதியை காதலித்தது, திருமணம் செய்து கொண்டது, கர்ப்பமானது, பாரதியின் சந்தேகத்தால் வீட்டை விட்டு வெளியேறியது என அனைத்தும் அடங்கியிருந்தன. இதனைத்தொடர்ந்து, புதிய கண்ணம்மாவாக நடிக்கும், வினுஷா அடுத்த எபிசோடில் என்ட்ரி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு இருந்தது.
அந்த வகையில் கண்ணம்மாவை 8 வருடமாக பிரிந்து வாழ்ந்து வரும் பாரதி, தன்னிடம் வளரும் குழந்தை ஹேமாவை, கண்ணம்மா தன் பாசத்தால் தன் பக்கம் ஈர்த்து விடுவார் என்று பயந்து விவாகரத்து கேட்டு கோர்ட் வரை சென்று விட்டார். ஆனால் பாரதிக்கு ஹேமா தன் குழந்தை என்று தெரியாது. அதை அவர் வளர்ப்பு குழந்தை என்று நினைத்து வளர்த்துக் கொண்டிருக்கிறார்.
கண்ணம்மாவுக்கு, தன்னிடம் வளரும் லட்சுமி மற்றும் பாரதியிடம் வளரும் ஹேமா இருவருமே தங்கள் இருவருக்கும் பிறந்த குழந்தை என்பது தெரியும். இந்த நிலையில் கோர்ட்டில் கண்ணம்மாவை நீதிபதி அம்மா அழைக்கும்போது, டாக்டர் பட பிஜிஎம் பின்னணியில் ஒலிக்க, புது கண்ணம்மாவான வினுஷா மாஸாக என்ட்ரி கொடுத்திருக்கிறார்.
இதனை அடுத்து, கோர்ட்டார் பாரதி மற்றும் கண்ணம்மா இருவர் கதையையும் விசாரித்தபோது இருவரின் குடும்பமும் இன்னும் பழகிக் கொண்டிருப்பதை அறிந்துகொண்டதுடன், பாரதியின் மகளை கண்ணம்மா பிரித்துவிடுவார் என்பதை தாண்டி, விவாகரத்துக்கான வலுவான காரணம் இல்லை என கூறுகிறார்.
ஆனால், தன் மகளை கண்ணம்மா பிரித்து விடுவாள் என்பதை தாண்டி விவாகரத்துக்கு அழுத்தமான காரணம் இருக்கிறது என்று கோர்ட்டாரிடம் பாரதி கூறுகிறார்.
இதன் பிறகு எப்படி கதை போகப்போகிறது என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அத்துடன் புதிய கண்ணம்மா எப்படியான வரவேற்பை ரசிகர்களிடம் பெறப் போகிறார் என்றும் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.