சோறு தான் டாடி முக்கியம்'.. சமையல் வேலையை விரும்பும் ஹேமா.. கண்ணம்மாவின் தாக்கமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வரவேற்பைப் பெற்ற பாரதி கண்ணம்மா

Advertising
>
Advertising

விஜய் டிவி சீரியல்களுள் முக்கியமான சீரியல் பாரதி கண்ணம்மா சீரியல். இதில் பாரதியாக அருண் பிரசாத்தும் கண்ணம்மாவாக ரோஷினியும் நடித்து வருகின்றனர். ரசிகர்கள் அபிமானத்தைப் பெற்ற இந்த தொடர் இதுவரை 700க்கும் மேற்பட்ட எபிசோட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பாரதி கண்ணம்மா தம்பதிகளின் குழந்தைகளான ஹேமா, பாரதியிடம் தத்துப் பிள்ளையாகவும், குழந்தை லக்‌ஷ்மி கண்ணம்மாவிடம் நேரடி மகளாகவும் வளர்கின்றனர். கண்ணம்மாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக பாரதி தவறாக புரிந்துகொண்டதால் இந்த பிரிவு ஏற்பட்டுள்ளது.

அப்பாவிடம் தத்துக் குழந்தையாக ஹேமா

ஆனால், இதில் ஹேமா பற்றிய உண்மையை பாரதியிடம் போட்டுடைத்த கண்ணம்மா, “குழந்தை ஹேமா எனது 2வது குழந்தை தான். அதாவது நம் குழந்தை தான்” என சொல்ல, அதிர்ச்சி அடைவார் என எதிர்பார்க்கப்பட்ட பாரதி, சற்றும் அதிராமல், கண்ணம்மா பொய் சொல்லி குழந்தையையும் தன்னையும் பிரிக்க முயல்வதாக கோபத்தில் திட்டிவிடுகிறார். மேலும் உண்மையைப் பேசினார் பாரதியின் அம்மாவும் தன் மாமியாரிடம் பாரதி கோபித்துக் கொள்வான் என கண்ணம்மா மேற்கொண்டு பேசாமல் விட்டுவிட்டார். அதையடுத்த  சமீபத்திய எபிசோட்களில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் அரங்கேறி பார்வையாளர்களின் பல்சை எகிற வைத்துள்ளது. இந்த நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலின் புதிய ப்ரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

செஃப் ஆக ஆசைப்படும் ஹேமா

இந்த ப்ரோமோவில் பாரதியின் குடும்பத்தினர் அனைவரும் சூழ்ந்திருக்க, நடுவில் இருக்கும் ஹேமாவிடம் வளர்ந்ததும் என்ன ஆகப் போகிறாய் என பாரதிக் கேட்க  அதற்கு அவர் தான் பெரிய செஃப் ஆகவேண்டும் என ஆசைப்படுவதாகக் கூறுகிறார். இதைக் கேட்கும் பாரதி அதிர்ச்சிக்குள்ளாகிறார். ஹேமாவிடம் ‘நீ பெரிய ஆளாகி நல்ல பொசிஷனுக்கு வரவேண்டும்’ எனக் கூறுகிறார். ஆனால் ஹேமாவோ ‘நான் வளர்ந்து செஃப்தான் ஆவேன். சோறுதான் முக்கியம் டாடி. குக் வித் ஹேமா’ என சொல்லிக் கொண்டே  செல்கிறாள். இது பாரதிக்கு மேலும் அதிர்ச்சியாக அமைகிறது.

தாயைப் போல பிள்ளை

குழந்தை ஹேமாவை எப்போதுமே சமையல் அம்மாவாக வரும் அவரின் உண்மையான அம்மா கண்ணம்மா தான், பள்ளியில் மதிய உணவு கொடுத்து கவனித்துக்கொள்கிறார். இதனால் அவர்களுக்குள் நெருக்கம் அதிகமாகிறது. குழந்தை ஹேமாவுக்கும் கண்ணம்மாவுக்குமான இந்த பிணைப்பை முறிக்கும் விதமாக இடையில் வெண்பா பிரியாணி எடுத்துவந்து கொடுத்து ஹேமாவை திசை திருப்ப முயன்றார். ஆனாலும் அந்த பிரியாணி சாப்பிட்டு வாந்தி எடுத்த ஹேமா வெண்பாவிடம், "இனி நான்  சமையல் அம்மாவின் உணவையே உட்கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டார்.

இந்த நிலையில்தான் பாரதி, அகிலன் மற்றும் பாரதியின் பெற்றோர் அனைவரும் அமர்ந்து பேசும் போது, ஹேமா தான் எதிர்காலத்தில் ஒரு சமையல் நிபுணராக வர வேண்டும் என்கிற ஆசையை கூற, பாரதி அதிர்ச்சியாகிறார். மேலும் "சமையல் பணி என்பது தாழ்ந்த பணி அல்ல, நாம் சமைத்துக் கொடுத்து, அதை மற்றவர்களுக்கு சாப்பிட கொடுத்து சந்தோஷப்படும் விஷயம்" என்று ஹேமா கூற அனைவருமே அதிர்கின்றனர்.

Director பாலா... தமிழச்சி தங்கப் பாண்டியன் மகள் திருமண விழாவுக்கு சிரித்த முகத்துடன் வந்த வீடியோ..!

தொடர்புடைய இணைப்புகள்

Bharathi kannamma Hema wants to be a chef shock to bharathi

People looking for online information on Bharathi Kannamma, Bharathi kannamma Hema, Bharathi Kannamma Serial, Bharathi Kannamma Serial Episode, Vijay Television will find this news story useful.