சின்னத்திரையில் பல்வேறு சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ஃபரீனா.
தற்போது விஜய் தொலைக்காட்சியில் வெளி வந்து கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா எனும் வில்லி ரோலில் நடித்து வருகிறார். இவரது நடிப்பை உலகம் முழுவதும் உள்ள சின்னத்திரை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதற்கிடையில் நடிகை ஃபரீனா தாய்மை அடைந்திப்பதாக நடிகை ரேமா உருக்கமாக தெரிவித்துள்ளார். ஃபரீனாவுக்கு வாழ்த்து சொன்ன ரேமா, ஃபரீனா எடுத்துக்கொண்ட ஃபோட்டோஷூட்டை பகிர்ந்துள்ளார்.
அத்துடன் டிவி சீரியலில் நடிக்கும் ஃபரீனா கர்ப்பிணியாக இருப்பதே தெரியவில்லை என்று மீம் கிரியேட்டர்கள் பதிவிட, அதற்கும் ஃபரீனா, ‘டேய்.. என் baby எனக்கு ரொம்ப சப்போர்ட். நான் சாரி கட்டும்போது என்னோட baby pump தெரியாது.. ஃபரீனாதான் pregnant.. வெண்பா இல்ல’ என ஜாலியாக பதில் அளித்துள்ளார்.
எனினும் கர்ப்பிணியாக இருந்தும், இன்னும் சில மாதங்கள் வரை சீரியலில் நடிப்பதை விடாமல் தொடர இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
‘ரெஸ்ட் எடுக்கலாமே? வெண்பா’ என்று கேட்கும் தனது நட்புகளுக்கும் உறவுகளுக்கும் ரசிகர்களுக்கும், “என்னை ரசிக்கிற பல்லாயிரக்கணக்கான உள்ளங்களுக்கு நான் தரப்போகும் நன்றி ஓய்வில்லாமல் நடிப்பதுதான். எனவே தாய்மை பேறு அடைவதற்கு இரண்டு மாதங்கள் முன்பு வரை நடிப்பேன்” என்று ஃபரீனா கூறியிருக்கிறார். இதனால் ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.