"இந்த பொண்ணையா அப்படி பாத்தோம்".. தாவணியில் EX கண்ணம்மாவின்‘’ ரீல்ஸ்க்கு ஹார்ட்டு விடும் FANS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் தற்போது மிகவும் சுவாரஸ்யத்துடன் அதே வேளையில் மிகவும் விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கும் தொடர் 'பாரதி கண்ணம்மா'.

Advertising
>
Advertising

உங்கள முதல் தடவ 'முழுசா' பாத்த 'லக்கி Guy' யாரு?.. ரசிகர் கேட்ட கேள்வி.. கூலா பதில் சொன்ன Bigg Boss பிரபலம்

இந்த தொடரின் முதன்மை கதாபாத்திரங்களான பாரதி மற்றும் கண்ணம்மா ஆகியோர், பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

கண்ணம்மா மீது சந்தேகம் வந்ததால், தொடர்ந்து அவரை நம்பாமல் ஒதுக்கி வரும் பாரதி, அனைத்து விஷயங்களிலும் அவரை ஒதுக்கியே வைத்துள்ளார்.

நம்பாத பாரதி

இன்னொரு பக்கம், பாரதி மற்றும் கண்ணம்மா ஆகியோருக்கு பிறந்த குழந்தைகளில் ஒன்றான லட்சுமி, கண்ணம்மாவிடமும், மற்றொரு குழந்தையான ஹேமா, பாரதியிடமும் வளர்ந்து வருகிறது. ஆனால், ஹேமாவும் தங்களுடைய குழந்தை என்பது பாரதிக்கு தெரியாது. ஹேமாவை தத்து குழந்தை என்றே நினைத்துக் கொண்டிருக்கிறார். உண்மை என்ன என்பதை எத்தனையோ முறை கண்ணம்மா எடுத்துக் கூற முயற்சித்தும், பாரதி நம்புவதாக இல்லை.

தில்லாலங்கடி வேலையில் வெண்பா

இவை அனைத்தையும் விட, பாரதி - கண்ணம்மா இடையேயுள்ள பிரிவை பயன்படுத்தி, வெண்பா குளிர் காய்ந்து வருகிறார். பாரதியை அடையும் முயற்சியிலும் பல தில்லாலங்கடி வேலைகளை பார்த்து வருகிறார். நாளுக்கு நாள், விறுவிறுப்பான காட்சிகளும் நிகழ்ந்து கொண்டிருப்பதால், எப்போதும் ட்ரெண்டிங்கில் பாரதி கண்ணம்மா சீரியல் உள்ளது. மேலும், தற்போது கண்ணம்மாவாக வினுஷா நடித்து வருகிறார்.

ரோஷ்னி வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ

இந்நிலையில், இதற்கு முன்னால் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோஷ்னி ஹரிப்ரியன் வெளியிட்டுள்ள இன்ஸ்டா ரீல்ஸ், ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. தாவணி புடவையில் அழகாக நடந்து வரும் ரோஷ்னி, அப்படியே கேமராவை பார்த்து விடும் லுக்கிற்கே பலரும் ஹார்டினைத் தட்டி வருகின்றனர். மேலும், சுட்டித்தனம் கலந்து குறும்பாக அவர் செய்யும் விஷயங்களும், இந்த ரீல்ஸ் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

மீம்ஸ் வீடியோக்கள்

முன்னதாக, பாரதி கண்ணம்மா தொடரில் ரோஷ்னி நடித்த போது, பை ஒன்றை எடுத்துக் கொண்டு, வீதி வீதியாக சென்ற காட்சிகள், அதிகம் மீம்ஸ் வீடியோக்களாக மாறியிருந்தது. ரோஷ்னி தற்போது விஜய் டிவியின் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோவான 'குக் வித் கோமாளி'யிலும், போட்டியாளராக கலந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

"இனி யாருக்குமே இப்படி நடக்கக் கூடாது!".. நடிகைக்கு நேர்ந்த கொடுமை.. சூர்யா உருக்கம்

 

தொடர்புடைய இணைப்புகள்

Bharathi kannamma fame roshini haripiriyan viral reels

People looking for online information on Bharathi Kannamma, Bharathi Kannamma Roshini, Bharathi Kannamma Serial, Bharathi Kannamma Serial Episode, Roshini Haripiriyan, Vijay Television will find this news story useful.