பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் அகிலன் நடிக்கும் திரைப்படங்கள் குறித்த செம்ம அப்டேட்கள் நமக்கு கிடைத்துள்ளன.
பாரதி கண்ணம்மா தொடரில் அகிலன் மற்றும் அஞ்சலி ஜோடிக்கு ஏராளமான ரசிகர்களும் இணைய பக்கங்களும் உள்ளன. இந்நிலையில் நடிகர் விஷாலின் புதிய திரைப்படமான விஷால்31 படத்தில் அகிலன் நடிப்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது. நிச்சயமாக அகிலனின் ரசிகர்களுக்கு இந்த தகவல் மகிழ்ச்சியான ஒன்றாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இயக்குநர் து.ப.சரவணன் இயக்கும் திரைப்படம் விஷால்31. இந்த படத்தில் விஷால் நடிக்கும் சண்டைக் காட்சிகள் கூட அண்மையில் இணையத்தில் வைரலானது. இந்த படத்தில் தான் பாரதி கண்ணம்மா தொடரின் பிரபலமான கேரக்டரான அகிலன் கேரக்டரில் நடிக்கும் அகிலன் SPR நடிக்கிறார்.
இதுபற்றி நம்மிடையே பிரத்தியேகமாக பகிர்ந்துகொண்ட அகிலன், “விஷால்31 படத்தில் படம் முழுவதும் ட்ராவல் பண்ணும் முக்கியமான கேரக்டர். இந்த படத்தில் எனக்கு ஜோடியாக நடிகை ரவீனா நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் 25 நாட்கள் பங்குபெறுகிறேன்.
யோகிபாபுவுடன் ஒரு நாள் தான் ஷூட்டிங் என்றாலும் அவருக்கே உரிய பாணியில் செம்ம Fun ஆக பழகினார். விஷால் சார் மைண்ட் ப்ளோவிங். குறிப்பாக அவ்வளவு பெரிய ஸ்டாரான விஷால் சார், என் கதாபாத்திரத்துக்கு இவ்வளவு ஸ்பேஸ் கொடுத்து நடித்துள்ளார். இன்னும் நிறையவே சர்ப்ரைஸ்கள் இருக்கின்றன. ” என்று பகிர்ந்துகொண்டார்.
இதே போல், “ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா சார் நடிக்கும் பகீரா படத்தில் ஒரு அருமையான கேரக்டரில் நடித்திருக்கிறேன். அந்த படம் ரிலீஸ் ஆகவிருக்கிறது.” என்றும் “பாரதி கண்ணம்மாவை பொருத்தவரை, செம்மயா போய்கிட்டு இருக்கு. இன்னும் நிறைய லவ், நிறைய திருப்பங்களுடனும் அடுத்தடுத்த எபிசோட்கள் வருகின்றன!” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.