ஸ்டார் விஜய் சேனலில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மா பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், லட்சுமி கண்ணம்மாவுடனும், ஹேமா வளர்ப்பு குழந்தை என்கிற பெயரில் பாரதியிடமும் வளர்ந்து வந்தனர்.
இந்நிலையில் பாரதிக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்றும், அதனால் குழந்தைகள் பாரதியுடைய குழந்தைகள் அல்ல என்றும் வெண்பா பாரதியை குழப்ப, பாரதியும் சந்தேகத்தால் 10 ஆண்டுகள் கண்ணம்மாவை பிரிந்து வாழ்ந்தார். ஆனாலும் இருவரும் ஒன்றாக ஒரே மருத்துவமனையில் வேலை பார்த்தனர். இதனிடையே ஹேமாவின் பெற்றோர் யாரென்கிற தேடுதலால் அனைத்துமே முடிவுக்கு வந்தது. அதன்படி கண்ணம்மாதான் தான் ஹேமாவின் அம்மா என்றும், பாரதிதான் உண்மையான அப்பா என்றும் ஹேமாவுக்கு தெரியவர, பாரதியோ, இன்னொரு பக்கம் இந்த பிரச்சனைகளால் அனைவரும் சொல்வது போல் டி.என்.ஏ டெஸ்ட் எடுத்து பார்த்துவிடலாம் என்கிற முடிவுக்கு வந்து, சாம்பிள்களை கொடுத்து, ரிசல்டுடன் வந்துவிட, அனைவர் முன்னிலையிலும் உண்மையை சொல்லி, அழுத பாரதி, கண்ணம்மாவிடம் மன்னிப்பும் கேட்டார்.
இதனிடையே அங்கும் குட்டை குழப்ப பார்த்த வெண்பாவுக்கு எதிராக அங்கேயே அடுத்தடுத்த சாட்சியங்கள் வந்ததை அடுத்து பாரதியை டி.என்.ஏ விஷயத்தில் ஏமாற்றி, கண்ணம்மாவை கொலை செய்ய பார்த்தது வரை அத்தனை உண்மைகளும் உடைந்தன. இதனால் போலீஸ் வந்து வெண்பாவை கைது செய்து அழைத்து சென்றனர். இதனிடையே குடும்பத்துடன் சேர்ந்து வாழ கண்ணம்மாவிடம் கோரிய பாரதியிடம் கண்ணம்மாவோ, அவரை மன்னிக்காமல், கோபத்திலும், வருத்தத்திலும் தனக்கு தன் பிள்ளைகள் போதும் என ஹேமா & லெட்சுமி இருவருடனும், தன் அப்பாவை அழைத்துக்கொண்டு சொந்த ஊருக்கு சென்றார். ஆனால் அங்கும் சென்று பாரதி, கண்ணம்மாவிடம் தன் காதலை வெளிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார்.
இதனிடையே ஏற்கனவே பாரதி, கண்ணம்மாவிடம் இருந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வர, இதில் இறுதி முடிவு தெரியவந்திருக்கிறது. அதன்படி விவாகரத்து மன நிலையில் இப்போதும் இருக்கிறீர்களா என்று நீதிபதி கேட்கும்போது கண்ணம்மா ஆமாம் என்று சொல்லிவிட்டார். அதேசமயம் பாரதி விவாகரத்து கொடுக்காமல் கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ்வதாக சொல்லி கேஸை இழுத்தடிப்பார் என்று கண்ணம்மா மனசுக்குள் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் யாரும் எதிர்பாராதபடி பாரதி, கண்ணம்மாவுக்கு விவாகரத்து தருவதாகச் சொல்லி விட்டார்.
அப்போது கண்ணம்மா ஷாக் ஆகிறார். அதன் பிறகு இதற்கான காரணத்தை கண்ணம்மா கேட்டதும், அவரிடம் வெளியே வந்து தனியே பேசுபோது தெரிவித்த பாரதி, “நான் இன்னும் உன்னை காதலிக்கிறேன். எவ்வித வற்புறுத்தலுடனும் நீ என்னுடன் வாழ கூடாது. அது காதலால் மட்டுமே இருக்க வேண்டும். என் குழந்தைகளை நீ நன்றாக பார்த்துக் கொள்வாய் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று குறிப்பிட்டார். மேலும் கோர்ட்டாரிடம் பாரதி பேசும்போது தன் குழந்தைகளை மட்டும் நேரில் சென்று பார்த்து வருவதற்கு அனுமதி வேண்டும் என்று கோரியிருந்தர். அதற்கு கோர்ட், “குழந்தைகள் மனம் விரும்பினால் பார்க்கலாம்” என அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.