பாரதி கேட்ட அந்த கேள்வி.. ஆடிப்போன வெண்பா.. பாரதி கண்ணம்மாவில் புதிய திருப்பம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை : பாரதி கண்ணம்மா தொடர் தற்போது விறுவிறுப்பாக இருக்கிறது, அதற்கு காரணம் இத்தொடரின் வில்லியான வெண்பா சிறையில் இருந்து வெளியே வந்தது தான். இனி இந்த தொடர் எப்படி இருக்குமோ என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.

Bharathi fights with Venba makes fans happy
Advertising
>
Advertising

நல்ல வரவேற்பு

சீரியல்கள் என்றால் இல்லத்தரசிகள் மட்டுமே பார்ப்பார்கள் என்ற ஒரு கோணம் இருந்தது. ஆனால், இப்பொழுது இருக்கும் தொடர்கள் அனைத்தும் பலரும் பார்த்து ரசிக்கின்றனர். ஃபேமிலி சென்டிமென்ட், காதல், ரொமான்ஸ் என்று அனைத்தையும் கலந்து சீரியல் வருவதால் அனைவரும் பார்க்கும் வகையில் இருக்கின்றது. அந்த வகையில் விஜய் டிவி பாரதி கண்ணம்மா தொடர், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.

Bharathi fights with Venba makes fans happy

வெளியே வரும்  வெண்பா

பாரதியும் கண்ணம்மாவும் ஒன்றாய் சேர்ந்து கண்ணம்மா வீட்டில் வசித்து வரும் நிலையில், வெண்பா சிறையிலிருந்து வெளியே வந்தால் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு பல ரசிகர்களிடையே இருந்து வந்தது. ரசிகர்களின் மைண்ட் வாய்ஸ் இயக்குனருக்கு கேட்டு விட்டது போல,  ரசிகர்களுக்கு பதிலளிக்கும் வகையில், சிறையிலிருந்த வெண்பா வெளியே வருவது போல் நேற்று சூப்பரான மாஸ் ப்ரோமோ வெளியிட்டனர்.

ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு.. தவறவிட்ட இயக்குனர் அல்போன்ஸ்.. அவரே சொன்ன பதில்

 

ரீ என்ட்ரி கொடுக்கும் வெண்பா

சிறையிலிருந்து வெளியே வரும் வெண்பா, பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் இடையே என்ன பிரச்சனை எல்லாம் ஏற்படுத்த போகிறார் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு இருந்தது. பாரதி வெண்பாவை நம்புவாரா? அல்லது கண்ணம்மாவை  நம்புவாரா? என்று குழப்பத்தில் இருந்தனர். இந்த தொடரில் வில்லியாக நடிக்கும் வெண்பா (farina) குழந்தை பிறப்புக்கு பிறகு சீரியலுக்கு ரீஎண்ட்ரி கொடுத்தது, ரசிகர்களை  சந்தோஷத்தில் மூழ்கடித்துள்ளது.

Exclusive : மின்னல் முரளி.. மிரள வைத்த ஷிபு கேரக்டர்.. சூப்பர் வில்லன் குருசோமசுந்தரம் பேட்டி!

 

அவருடைய நடிப்புக்கு பல ரசிகர்களின் இருந்து வருகின்றனர். சமீபத்தில் அவர் கைக்குழந்தையுடன் வந்து சூட்டிங்கில் கலந்து கொண்ட  புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிய நிலையில், அவர் எபிசோடில் வரும் காட்சிகள் சீரியலை சுறுசுறுப்பாக கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

நம்பாத பாரதி

சிறையிலிருந்து ஜாமினில் வெளியே வரும் வெண்பா, பாரதியை சந்திக்க வருகிறார். வெண்பாவை பார்த்தவுடன் பாரதி டென்ஷனாக சத்தம் போட தொடங்குகிறார். அஞ்சலியை  கடத்தியது முதல், கொலை செய்யத் துணிந்தது வரை அனைத்தும் பாரதிக்குத் தெரிந்ததனால், அதை அனைத்தையும் வெண்பாவிடம்  கேட்கிறார். " அஞ்சலி, உனக்கு என்ன பாவம் செஞ்சா , எனக்கு வரும் கோபத்துக்கு உன்னை அறைந்து  விடுவேன்" என்று கோபமாக சத்தம் போடுகிறார்.

கொஞ்சம் பொறுமையா இரு பாரதி என்று அவரை சமாதானம் செய்ய முயற்சிக்கிறார் வெண்பா. இருந்தாலும், கோபம் தாங்க முடியாமல் மீண்டும் சத்தம் போடுகிறார் பாரதி. உன்னை எல்லாம் வெளியே விட்டதே தப்பு என்று சொல்ல, வெண்பாவுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கிறார்.


வெண்பாவால் ஒன்னும் நடக்காது

அதை தொடர்ந்து, கண்ணம்மாவை பற்றி விசாரிக்க தொடங்குகிறார் வெண்பா, அதை கேட்ட பாரதி, நான் எங்கேயோ இருக்கேன். யார் கூடவோ இருக்கேன். அதைக் கேட்க நீ யார்? என்று எடுத்தெறிந்து பேசுகிறார் பாரதி. இதை பார்த்த வெண்பாவிற்கு செம கோவம் வர, இந்த ப்ரோமோ முடிகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் இனி வெண்பாவால் ஒன்னும் நடக்காது என பேசத் தொடங்கியுள்ளனர். மேலும் பாரதியும், கண்ணம்மாவும் விரைவில் சேர்வார்கள் என்ற நம்பிக்கையும் இந்த ப்ரோமோ மூலம் புரிகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Bharathi fights with Venba makes fans happy

People looking for online information on பாரதி கண்ணம்மா, வெண்பா, Bharathi, Bharathikannama, Venba will find this news story useful.