நடிகர் பரத்தின் 50-வது படம்.. மீண்டும் ஜோடி சேர்ந்த நடிகை வாணி போஜன்! செம அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பரத் - வாணி போஜன் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.

Bharath - Vani Bhojan starrer new project Bharath50
Advertising
>
Advertising

தனது யதார்த்தமான நடிப்பால் பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் பரத்.திரைத்துறையில் நடிகராக தனது பயணத்தை தொடங்கி பல வெற்றி படங்களை அளித்த நடிகர் பரத் நடிக்கும் 50வது படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

Bharath - Vani Bhojan starrer new project Bharath50

திரில்லர் கலந்த பேமிலி டிராமா திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் நடிகர் பரத் ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார். R P பிலிம்ஸ் பிரமாண்டமாக இப்படத்தை தயாரிக்கின்றது. விவேக் பிரசன்னா, பிக் பாஸ் புகழ் டேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.



லூசிபர், மரைக்காயர், குருப் உள்ளிட்ட பல படங்களுக்கு தமிழில் வசனங்கள் மற்றும் பாடல்களை எழுதிய R.P.பாலா இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். பிரபல ஒளிப்பதிவாளர் P.G.முத்தையா இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம்:

இயக்கம் - R.P.பாலா (இவர் இயக்கும் முதல் படம்)
தயாரிப்பு - R.P.பாலா, கௌசல்யா பாலா (R P பிலிம்ஸ்)
ஒளிப்பதிவு - P.G.முத்தையா
இசை - ரான்னி ரபேல் (மரைக்காயர்)
படத்தொகுப்பு - அஜய் மனோஜ்
கலை - சுரேஷ் கலம்பு
சவுண்ட் டிசைனர் - M.R.ராஜா கிருஷ்ணன்
நடனம் - பூபதி
எக்ஸிகியுடிவ் புரொடுயுசர் - ஆண்டொ L
புரொடக்‌ஷன் கண்ட்ரோலர் - S.சிவகுமார்
லைன் புரொடுயுசர் - ஆதவ்
காஸ்டுயூம் டிசைனர் - கஸ்தூரி இரானி
ஸ்டில்ஸ் - ரஞ்சித்
மக்கள் தொடர்பு - சதீஷ் (AIM)

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Bharath - Vani Bhojan starrer new project Bharath50

People looking for online information on Bharath, Bharath50, Vaani Bhojan will find this news story useful.