பரத், வாணி போஜன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம், ‘மிரள்’. LOVE படத்துக்குப் பிறகு மீண்டும் பரத் – வாணிபோஜன் கூட்டணி இணைந்த ‘மிரள்’ திரைப்படத்தை இயக்குனர் M.சக்திவேல் இயக்கியிருந்தார். ‘ராட்சசன்’ உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி டில்லி பாபு தயாரித்த இந்த திரைப்படம் கடந்த நவம்பர் 11-ஆம் தேதி வெளியானது.

Also Read | அஜித் நடிக்கும் 'துணிவு'.. ஒட்டுமொத்த ஐரோப்பிய உரிமையை கைப்பற்றிய பிரபல வினியோகஸ்தர்!
பரத், வாணி போஜன், கே.எஸ்.ரவிகுமார், மீரா கிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி நடித்துள்ள இந்த படத்திற்கு பிரசாத் SN இசை அமைத்திருந்தார். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்ய, கலைவாணன் எடிட்டிங்கையும், டேஞ்சர் மணி சண்டைப் பயிற்சியினையும் கையாண்ண்டனர். த்ரில்லர் படமாக வெளியான இந்த படத்தை சக்தி ஃபிலிம் பேக்டரி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் இதுகுறித்து இயக்குநரிடம் கேட்டறிந்தபோது, பள்ளிக்கரணையை சேர்ந்த தான், சென்னை அருகே உள்ள துரைப்பாக்கத்தில் மாமனார் வீட்டுக்கு சென்றிருந்ததாகவும், அப்போது மருந்து ஆர்டர் செய்து வெகுநேரம் ஆகியும் மர்ந்து வரவில்லை என்பதால், மருந்து வாங்குவதற்காக வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பும்போது, தன்னை பாம்பு ஒன்று கடித்துவிட்டு ஓடிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் தற்போது பூரண நலமாக இருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், மழை நேரத்தில் பாம்புகள் அந்த பகுதியில் வெளிவந்திருக்கலாம் என்றும் தெரிவித்தார். மேலும் இந்நேரத்தில் தன்னை தொடர்பு கொண்டு நலம் விசாரித்த பலருக்கும் நன்றி தெரிவித்ததுடன், மிரள் திரைப்படம் குறித்தும் பேசிய இயக்குநர் M.சக்திவேல், “திரையரங்கில் வெளியானபோதே மிரள் படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. தற்போது படம் ஆஹா ஓடிடியில் வெளியாகியுள்ளது. திரையரங்கில் மிஸ் பண்ணியவர்கள் இப்போது ஓடிடியில் பார்த்துவிட்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
தொடர்ந்து அடுத்த திரைப்படத்துக்கான செயல்பாடுகளை செய்துவருவதாகவும், விரைவில் அவைகுறித்த தகவல்கள் தெரிவிக்கப்படும்” என்றும் குறிப்பிட்டார்.
Also Read | நடிகர் சிவகுமார் தலைமையில், தயாரிப்பாளர் தனஞ்ஜெயனின் இளையமகள் திருமணம்.! திரண்ட திரையுலகம்.