லிப்ரா ரவீந்தர் தயாரிப்பில் பரத் நடிக்கும் புதிய த்ரில்லர்… TITLE உடன் வெளியான ஃபர்ஸ்ட்லுக்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் பரத் நடிப்பில் உருவாகும் அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | நாயகன் மீண்டும் வரார் ‘ஓடிடி’யில் … “ டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வெளியிட்ட ‘தெறி’ அப்டேட்!

பரத்

இயக்குனர் ஷங்கரின் பாய்ஸ் திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் பரத். அவருக்கு திருப்புமுனையாக அமைந்த படமாக பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் திரைப்படம் அமைந்தது. அதன் பின்னர் எம்டன் மகன், கண்டேன் காதலை, பழனி உள்ளிட்ட  பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்தார். சமீபத்தில் பாலிவுட்டில் சல்மான் கான் படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்து பாலிவுட்டிலும் கால்பதித்தார். ஹீரோவாக மட்டும் இல்லாமல் செல்லமே மற்றும் ஸ்பைடர் உள்ளிட்ட படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார்.

பரத் 50

திரைத்துறையில் நடிகராக தனது பயணத்தை தொடங்கி பல வெற்றி படங்களை அளித்த நடிகர் பரத் நடிக்கும் 50வது படமான “LOVE”  படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. திரில்லர் கலந்த பேமிலி டிராமா திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் நடிகர் பரத் ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார். R P பிலிம்ஸ் பிரமாண்டமாக இப்படத்தை தயாரிக்கின்றது. விவேக் பிரசன்னா, பிக் பாஸ் புகழ் டேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். LOVE படத்துக்குப் பிறகு பரத் & வாணிபோஜன் கூட்டணி ‘மிரள்’ என்ற படத்திலும் இணைந்து நடித்து வருகிறது.

முன்னறிவான்

இந்நிலையில் இப்போது பரத் நடிக்கும் மற்றொரு படமான ‘முன்னறிவான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் ஆர்யா, ஜி வி பிரகாஷ் மற்றும் ஷாந்தனு ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். இந்த திரைப்படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் தற்போது கவனம் ஈர்த்துள்ளது. இந்த படத்தை சமீபத்தில் வெளியான ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படத்தைத் தயாரித்த லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் தயாரிக்கிறார். இந்த படத்தில் ஜனனி, அஸார், மிர்ச்சி செந்தில் மற்றும் கரு பழனியப்பன் ஆகியோர் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்க, ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

Also Read | சிம்பு மற்றும் மனைவியோடு T ராஜேந்தர்… இலண்டனில் இருந்து வெளியான சமீபத்தைய புகைப்படம்

தொடர்புடைய இணைப்புகள்

Bharath munnarivaan movie firstlook got attention

People looking for online information on Bharath, Munnarivaan movie, Munnarivaan movie firstlook poster will find this news story useful.